Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இந்த தேதிகளில் பிறந்தவங்க சனி பகவானுக்கு ரொம்பவும் பிடிச்சவங்களாம்.. இவங்கள அதிகமா கஷ்டப்படுத்த மாட்டாராம்!
Numerology In Tamil: நியூமராலஜி என்று அழைக்கப்படும் எண் கணிதத்தில் 1-9 வரையிலான எண்களை அடிப்படையாக கொண்டு, ஒருவரது எதிர்காலம், தொழில் வாழ்க்கை, நிதி நிலை, குணாதிசயங்கள் போன்றவை கணித்து கூறப்படுகின்றன. இந்த 1-9 வரையிலான எண்கள் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்ணாகும். உதாரணமாக, ஒருவரது பிறந்த தேதி 25 என்றால், இவரது கூட்டுத்தொகை 7.
இந்த எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கத்தைக் கொண்டவை. இந்த கோள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வங்களைக் குறிக்கின்றன. மேலும் ஒவ்வொரு எண்ணிற்கு உரியவர்கள் அந்த எண்ணிற்கு உரிய தெய்வங்களின் ஆசியை பெற்றிருப்பார்கள்.

கிரகங்களில் சனி பகவான் என்றாலே அனைவருக்கு ஒருவித பயம் இருக்கும். ஏனெனில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலனைத் தரக்கூடியவர். இந்த சனி பகவானின் ஆசியைப் பெற்றிருந்தால், அந்நபர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பார். அந்த வகையில் எந்த தேதிகளில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆசியைப் பெற்றவர்கள் என்பதை இப்போது காண்போம்.
எண் 8
எண் 8-ஐ சேர்ந்தவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாவிகள். இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கூர்ந்து கவனித்து புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. எண் கணிதத்தில், இந்த எண் 8-ற்கு உரிய கிரகம் சனி.
இந்த எண்ணை விதி எண்ணாக கொண்டவர்களை சனி பகவானுக்கு பிடித்த மற்றும் சனி பகவானின் சிறப்பான ஆசியைப் பெற்றவர்கள். மேலும் இந்த எண்ணிற்கு உரிய தேதிகளில் பிறந்தவர்கள் அமைதியான இயல்புடையவர்கள். யாருடனும் அதிகம் பழகமாட்டார்கள் மற்றும் இவர்களது மனதில் இருப்பதை அறிவது கடினம்.
குணாதியங்கள்
விதி எண் 8-க்கு உரியவர்கள் அதிகம் பேசமாட்டார்கள் மற்றும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள். சனி மிகவும் மெதுவாக நகர்வது போன்றே, இவர்கள் படிப்படியாக வாழ்க்கையில் வெற்றியை மெதுவாக காண்பார்கள். வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி அதிகம் சிந்திக்கமாட்டார்கள் மற்றும் தங்களிடம் கொடுத்த வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்வார்கள். இதன் காரணமாக, நிச்சயம் வெற்றி காண்பார்கள்.
முக்கியமாக இந்த எண்ணிற்கு உரியவர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி காண்பார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள், தங்கள் மனதில் பட்டதை செய்யக்கூடியவர்கள். மற்றவர்களுடன் அவ்வளவு எளிதில் பழகமாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்கள் மிகவும் குறைவு மற்றும் மற்றவர்களின் ஆதரவைப் பெறமாட்டார்கள். இருப்பினும், தங்கள் வாழ்க்கையில் எதை செய்தாலும், அதை தாங்களாகவே செய்வார்கள்.
நிதி நிலை
விதி எண் 8-க்கு உரியவர்களின் நிதி நிலையைப் பற்றி கூற வேண்டுமானால், இவர்களின் நிதி நிலை நிலையானதாக இருக்கும். ஏனெனில். இவர்கள் ஆடம்பர செலவுகளை அதிகம் செய்யமாட்டார்கள். பணத்தை நன்கு சேமிப்பார்கள்.
இவர்களுக்கு முதலீடுகளில் நம்பிக்கை அதிகம் இருக்கும். இவர்களால் சில காரணங்களால் தங்கள் படிப்பை முழுமையாக முடிக்க முடியாமல் போகலாம். மேலும் இவர்கள் குறைந்த கடின உழைப்பிலேயே தங்கள் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
தொழில் வாழ்க்கை
எண் கணிதத்தின் படி, விதி எண் 8-ஐ கொண்டவர்களின் வேலை பெரும்பாலும் என்ஜினியரிங் அல்லது எலக்ட்ரானிக்ஸ் தொடர்பானதாக இருக்கும். இந்த எண்ணிற்கு உரியவர்கள் நல்ல வியாபாரிகளாக இருப்பர். கட்டுமானப் பொருள் வழங்கல், இரும்பு மற்றும் எண்ணெய் தொடர்பான பொருட்கள் போன்ற வேலைகளில் இருப்பவர்கள் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள்.
அதோடு, இவர்களுக்கு போலீஸ் அல்லது இராணுவம் தொடர்பான வேலைகளும் சிறப்பாக இருக்கும். எதுவாயினும், இவர்கள் எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும், அதில் நிச்சயம் வெற்றி காண்பார்கள்.
பலம்
* கடின உழைப்பாளிகள்
* மிகவும் தீர்க்கமானவர்கள்
* சமநிலையான மனதைக் கொண்டவர்கள்
* தத்துவ இயல்பைக் கொண்டவர்கள்
பலவீனம்
* சற்று கடினமானவர்கள்
* அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள்
* தாழ்வு மனப்பான்மை அதிகம் கொண்டவர்கள்
* பண மனம் கொண்டவர்கள்
* சட்டென கோபம் கொள்வார்கள்
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











