Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
நீங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க அதிர்ஷ்டத்தை அதிகரிக்க என்ன செய்யணும்-ன்னு சொல்றோம்...
Numerology In Tamil: எண்கள் நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு கிளையான எண் கணிதத்தில், எண்களைக் கொண்டு தான் ஒருவரது எதிர்காலம், குணாதிசயங்கள் மற்றும் பல விஷயங்கள் கணித்து கூறப்படுகின்றன.
இது தவிர ஒருவரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க எண் கணிதத்தில் வழிகள் உள்ளன. நியூமராலஜியில் 1-9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்களும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையவை. நிறைய பேர் தங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாததை உணர்வதுண்டு.

இந்நிலையில் ஒருவர் பிறந்த தேதிக்கு ஏற்ப ஒருசிலவற்றை செய்யும் போது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம் என்பது தெரியுமா? கீழே அதிர்ஷ்டத்தை அதிகரிக்க ஒருவரது பிறந்த தேதிக்கு எந்த மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணின் அதிபதி சூரியன். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல தலைமைப்பண்புகளைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் பின்வரும் விஷயங்களை மனதில் வைத்து நடந்தால், நிச்சயம் அதிர்ஷ்டம் எப்போதும் ஆதரவாக இருக்கும்.
கோபத்தையும், வெளிப்படையாக பேசும் தன்மையையும் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் இது இவர்களுக்கு எதிரிகளை தான் அதிகரிக்கும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அதாவது வெட்டி செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு ஆரஞ்சு மற்றும் சிவப்பு மிகவும் அதிர்ஷ்டமான நிறங்கள். இவர்களின் அதிர்ஷ்ட எண் 9, 2, 5, 3, 4, 6. இந்த அதிர்ஷ்ட எண்ணையும், அதிர்ஷ்ட நிறங்களையும் பயன்படுத்தும் போது, அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி கிடைக்கும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த எண்ணின் அதிபதி சந்திரன். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள், அன்பானவர்கள், யாரையும் புண்படுத்தமாட்டார்கள் மற்றும் யாருடனும் எளிதில் பழகமாட்டார்கள். இவர்கள் மிகவும் மென்மையானவர்கள் மற்றும் நல்ல கற்பனைத் திறன் கொண்டவர்கள்.
இவர்கள் நண்பர்களை தேர்வு செய்யும் போது கவனமாக இருப்பார்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருக்கமாட்டார்கள். நிலையாக வேலை செய்யக்கூடியவர்கள் மற்றும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை முழுமையாக முடிப்பவர்கள். இவர்கள் அனைத்திலும் வெற்றி காண வேண்டுமானால், திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஒருவேளை தோல்வியடைந்தால், அந்த தோல்விக்கான காரணத்தை அறிந்து, அதை சரிசெய்து செயல்பட வேண்டும்.
மேலும் இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் அதிர்ஷ்ட எண் 1, 5, 3, 2 ஆகும். இந்த நிறத்தையும், எண்ணையும் பயன்படுத்தினால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
எண் 3
3, 21, 12, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த எண்ணின் அதிபதி வியாழன்/குரு. இந்த எண்ணில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாக இருப்பர். எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நல்ல ஆலோசகராக இருப்பார்கள்.
அனைவருடனும் நன்கு பழகுவார்கள் மற்றும் இவர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளையும் விரும்பமாட்டார்கள். இவர்கள் வாழ்வில் நல்ல வெற்றியை காண விரும்பினால், லாட்டரியில் பணத்தை செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். கடின உழைப்பின் மூலம் மட்டுமே பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டும்.
மேலும் இவர்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் அதிர்ஷ்ட எண் 1, 5, 2, 3, 9 ஆகும். இந்த எண்ணையும், நிறத்தையும் பயன்படுத்தும் போது அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த எண்ணின் அதிபதி ராகு. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாக, எதையும் நன்கு நிர்வகிக்கக்கூடியவர்களாக இருப்பர். நன்கு திட்டமிட்டு வேலை செய்யக்கூடியவர்கள், எதையும் சிறந்து வழிநடத்துவார்கள். இவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண பங்குச் சந்தை அல்லது வேறு ஏதேனும் நிதி சந்தையில் முதலீடு செவ்தைத் தவிர்க்க வேண்டும்.
இவர்களின் அதிர்ஷ்ட நிறம் வெளிர் நீலம் மற்றும் அதிர்ஷ்ட எண் 7, 6, 5, 1 ஆகும். இந்த அதிர்ஷ்ட எண்ணையும், நிறத்தையும் பயன்படுத்தினால், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தங்கள் செயல்களில் வெற்றி காணலாம்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த எண்ணின் அதிபதி புதன். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை எளிதில் சமநிலைப்படுத்தி வாழ்வார்கள். எந்த துறையிலும் சிறந்தவர்களாக, அனைத்தும் தெரிந்தவர்களாக இருப்பர்.
நல்ல பேச்சாற்றலை கொண்டிருப்பார்கள் மற்றும் பேச்சால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பார்கள். இவர்கள் தங்களின் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. தங்கள் வேலைகளில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்தால், வெற்றி அடைய முடியாது.
இவர்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் அதிர்ஷ்ட எண் 1,2, 5, 6, 4, 8 ஆகும். இந்த அதிர்ஷ்ட எண்ணையும், நிறத்தையும் ஒரு புதிய காரியத்தில் ஈடுபடும் போது பயன்படுத்தினால், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி கிடைக்கும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த எண்ணின் அதிபதி சுக்கிரன். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அழகானவர்களாக, மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருப்பார்கள். இவர்களின் புன்னகை நிறைந்த முகம், நிறைய நண்பர்களை உருவாக்கும். ஆனால் இவர்களின் ரகசியங்களை யாராலும் எளிதில் அறிய முடியாது.
இவர்கள் தங்கள் பணத்தை ஆடம்பரமான வாழ்க்கைக்காக அதிகம் செலவழிப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே பொறாமை குணம் கொண்டிருப்பதால், அதை தவிர்க்க வேண்டும். சிறு வேலைக்கும் தேவையில்லாமல் விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் அதிர்ஷ்ட நிறங்கள் பிங்க், வெள்ளை மற்றும் இவர்களின் அதிர்ஷ்ட எண் 7, 4, 8, 5, 6 ஆகும்.
எண் 7
7, 16, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த எண்ணின் அதிபதி கேது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் கீழ்படிந்தவர்களாக இருப்பர். நிறைய துரோகத்தை சந்திப்பார்கள். நல்ல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்பம் கொண்டவர்கள். எளிமையான வாழ்க்கை வாழ விரும்புவார்கள் மற்றும் ஆடம்பரத்திற்காக தேவையில்லாமல் செலவழிக்கமாட்டார்கள். தங்கள் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.
நல்ல உள்ளுணர்வு கொண்டவர்கள். இவர்கள் தங்களிடம் ஒரு வேலையைக் கொடுத்தால், அதை முழுமையாக முடிக்க வேண்டும். குடும்பத்தை மதிக்க வேண்டும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு மற்றும் வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள் 4, 6, 5, 8 ஆகும். இந்த எண்களையும், நிறங்களையும் பயன்படுத்தும் போது வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த எண்ணின் அதிபதி சனி. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எதையும் சற்று மெதுவாக செய்யக்கூடியவர்களாக இருப்பர். வாழ்வில் பல ஏற்த்தாழ்வுகளைக் காண்பார்கள். கடின உழைப்பாளிகள் மற்றும் எந்த சூழ்நிலையையும் எளிதில் சமாளித்து இருப்பார்கள். தங்களிடம் கொடுக்கும் வேலையை சரியாக முடிப்பார்கள்.
தங்கள் இலக்கை அடைவதி பிடிவாதமாக இருப்பார்கள். இவர்கள் எந்த ஆடம்பரமான பொருட்கள் மீதும் அதிகம் ஆசை கொள்ளமாட்டார்கள். இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சற்ற கவனம் செலுத்த வேண்டும். லாட்டரில் பணம் செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவர்களின் அதிர்ஷ்ட நிறங்கள் கருப்பு மற்றும் அடர் நீலம்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த எண்ணின் அதிபதி செவ்வாய். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சமூக சேவகர்கள். ஆல்-ரவுண்டர்களாக இருப்பர். குடும்பத்திற்கு பதிலாக சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சட்டென கோபம் கொள்ளக்கூடியவர்கள். கடந்த காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படமாட்டார்கள். இவர்களின் வாழ்க்கை ஆரம்ப காலத்தில் சற்று கடினமாக இருக்கும். ஆனால் முதுமை காலத்தில் அமைதியாக இருக்கும்.
இவர்கள் தங்கள் பெற்றோரைப் பற்றி மட்டுமின்றி, தங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றியும் சற்று கவலைப்பட வேண்டும். தேவையில்லாமல் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பண இழப்பை சந்திப்பதோடு, சுய மரியாதையையும் இழக்க நேரிடும். இவர்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 5, 7 ஆகும். இந்த எண்கள் மற்றும் நிறங்களை பயன்படுத்துவதன் மூலம் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











