Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்களாம்... இவங்கள வீழ்த்தவே முடியாதாம்..
Numerology: ஒருவரது பிறந்த தேதி அந்நபரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படி எண்களை அடிப்படையாக கொண்டது தான் எணி கணிதம். இந்த எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான விதி எண்கள் உள்ளன. இந்த விதி எண்களானது ஒருவரின் பிறந்த தேதியில் இருந்து பெறப்படுகிறது. உதாரணமாக ஒருவர் 25 ஆம் தேதி பிறந்தால், அந்நபரின் விதி எண் 2+5=7 ஆகும். இந்த விதி எண்களைக் கொண்டு ஒருவரது குணாதிசயங்கள், எதிர்காலம், தொழில் வாழ்க்கை, திறமை போன்ற பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.
மேலும் எண் கணிதத்தில் உள்ள விதி எண்கள் ஒவ்வொன்றிற்கும் அதிபதிகள் உள்ளனர். அந்த அதிபதிகளை பொறுத்தும், ஒருவரது குணாதியங்கள் இருக்கும். அந்த வகையில் ஒரு மாதத்தில் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய விதி எண் தான் 1. இந்த எண்ணின் அதிபதி சூரியனாக கருதப்படுகிறது. இந்த எண்ணிற்கு உரியவர்கள் வலுவான தனித்துவ உணர்வு, தலைமைப் பண்புகள் மற்றும் சாதனை புரிய வேண்டுமென்ற வலுவான ஆசையைக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக இந்த எண்ணிற்கு உரிய பெண்கள் தங்கள் தொழிலில் பல சாதனைகளையும், வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள்.

01-க்கு உரிய பெண்கள்
விதி எண் 01-க்கு உரிய பெண்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் மக்களை சிறப்பாக வழிநடத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். இந்த குணங்கள் காரணமாக, இந்த விதி எண்ணிற்கு உரிய பெண்கள் தொழில் துறையில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். கையில் எடுக்கும் ஒவ்வொரு வேலையையும் திறம்பட செய்து முடிப்பார்கள்.
வலுவான நிதி நிலை
விதி எண் 1-க்கு உரிய பெண்கள் அதிக சுயமரியாதையையும், பிடிவாத குணத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்களின் இந்த பிடிவாத குணத்தால் முடித்த வேலைகள் கூட பாழாகும். முக்கியமாக இந்த எண்ணிற்கு உரிய பெண்கள் நல்ல நிதி நிலையுடன் இருப்பார்கள். இவர்களின் கையில் பணம் அதிகம் சேரும். எப்போதும் இவர்களுக்கு பண பிரச்சனையே வராது. இவர்கள் தங்களின் கடின உழைப்பால் பல வெற்றிகளையும், நிறைய பணத்தையும் சம்பாதிப்பார்கள்.
குணங்கள்
விதி எண் 1-க்கு உரிய பெண்கள் அனைவருடனும் நன்கு பழகுவார்கள். தங்கள் குடும்பத்தை அதிகம் மதிப்பார்கள். தங்களைச் சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள். தங்களுக்கு பிடித்தவர்களுக்கு நிறைய பணத்தை செலவழிப்பார்கள். ஒரு உறுதியான மற்றும் நம்பிக்கையான வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள். இருப்பினும், இவர்கள் சில சமயங்களில் சற்று சுயநலம் கொண்டவர்களாக இருப்பதால், இது உறவுகளில் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications