Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
நியூமராலஜி படி, 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2024 எப்படி இருக்கப் போகுது-ன்னு தெரியுமா?
Numerology 2024 Prediction: எண்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைக் கணித்து கூறும் ஜோதிடம் தான் எண் கணிதம். இந்த எண் கணித்தில் ஒருவரது விதி எண்ணானது அவரது பிறந்த தேதியைக் கொண்டு பெறப்படுகிறது.
எப்படி ஜோதிடத்தில் 9 கிரகங்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறதோ, அதேப் போல் எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது.

ஜோதிடத்தைப் போன்றே, எண் கணிதத்திலும் ஒருவரது பிறந்த தேதியின் படி 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது. உங்களின் விதி எண் 9 என்றால், அந்த விதி எண்ணை சேர்ந்தவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
விதி எண் 9-க்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த 9 என்ற எண்ணிற்கு உரிய அதிபதி செவ்வாய் என்பதால், இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே சற்று தைரியசாலியாக இருப்பார்கள்.
இந்த ஆண்டில் இவர்கள் எப்பேற்பட்ட பிரச்சனைகளையும், நெருக்கடிகளையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். எதற்கும் அதிகம் அவசரப்படுவீர்கள். இந்த அவசரத்தினால் நஷ்டங்களை சந்திக்க நேரிடும். இந்த ஆண்டில் கோபமும், ஆக்ரோஷமும் சற்று அதிகமாக இருக்கும்.
இதன் விளைவாக நிறைய எதிரிகளை சம்பாதிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொண்டுகளிலும் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று பலவீனமாக இருப்பீர்கள். ஆனால் யோகா மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
2024-ல் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?
2024 ஆம் ஆண்டில் எண் 9-க்கு உரியவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே இணக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இருப்பினும், தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையைப் பராமரிக்க முயற்சிக்க அறிவுறுத்தப்படுகிறது.
2024-ல் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
நியூமராலஜி படி, 2024-ல் எண் 9-க்கு உரியவர்களின் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, விரக்தியடைந்து வேலையை விட்டுவிட வேண்டாம். இல்லாவிட்டால் மீண்டும் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். எனவே திட்டமிட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டும். வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.
ஏதேனும் புதிய வேலைகளைத் தொடங்க நினைத்தால், யாரையும் சார்ந்திருக்காதீர்கள். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். அரசு வேலை செய்பவர்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் பிரச்சனைகளை சந்தித்தாலும், இரண்டாம் பாதியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications