Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
சனி பகவானின் அருளால் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2024-ல் நல்ல வெற்றி கிடைக்கப்போகுது...
Numerology 2024 Prediction: எண்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைக் கணித்து கூறும் ஜோதிடம் தான் எண் கணிதம். இந்த எண் கணித்தில் ஒருவரது விதி எண்ணானது அவரது பிறந்த தேதியைக் கொண்டு பெறப்படுகிறது.
எப்படி ஜோதிடத்தில் 9 கிரகங்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறதோ, அதேப் போல் எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது.

ஜோதிடத்தைப் போன்றே, எண் கணிதத்திலும் ஒருவரது பிறந்த தேதியின் படி 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது. உங்களின் விதி எண் 8 என்றால், அந்த விதி எண்ணை சேர்ந்தவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
விதி எண் 8-க்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த 8 என்ற எண்ணின் அதிபதி சனி பகவான். அதே சமயம் 2024 ஆம் ஆண்டிற்குரிய எண்ணும் 8 என்பதால், இந்த ஆண்டில் சனி பகவானின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். சனி பகவானின் செல்வாக்கு நிறைந்த இந்த ஆண்டில் விதி எண் 8-ஐ கொண்டவர்களுக்கு பொறுமை சற்று அதிகரிக்கும்.
ஒவ்வொரு வேலையையும் நிதானமாக செய்து வெற்றி காண்பீர்கள். மேலும் இந்த ஆண்டில் நீங்கள் செய்யும் வேலைகளில் 8 என்ற கூட்டு எண் வரக்கூடியவாறான எண்ணைத் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு தான் அந்த வேலையில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். மிகவும் வெளிப்படையாக இருப்பீர்கள். இப்படி இருப்பதால் மற்றவர்கள் உங்களால் மகிழ்ச்சியடையாமல் போக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சில பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்கலாம்.
2024-ல் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?
எண் 8-க்கு உரியவர்களின் காத்ல் வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள போதுமான நேரத்தை ஒன்றாக செலவிட அறிவுறுத்தப்படுகிறது. திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு மற்றும் ஆரோக்கியத்தைக் கவனித்து அதை பேணி வந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம். மொத்தத்தில் திருமண வாழ்க்கை இந்த ஆண்டு நன்றாக இருக்கும்.
2024-ல் தொழில் எப்படி இருக்கும்?
நியூமராலஜியின் படி, இந்த ஆண்டில் நீங்கள் 7, 8, 1, 6, 2 மற்றும் 4 ஆகிய எண்களால் பாதிக்கப்படுவீர்கள். 8 மற்றும் 7-க்கு இடையிலான உறவு ஓரளவு நன்றாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆராய்ச்சி துறையில் பணிபுரிந்து வந்தால், இந்த ஆண்டில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள்.
மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சிரமங்களை சந்திப்பீர்கள். ஆனால் இரண்டாம் பாதியில் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். தேவையில்லாத விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இந்த ஆண்டில் நல்ல பொருள் வசதிகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும், உணர்ச்சி ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications