Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
நியூமராலஜி படி, 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2024 எப்படி இருக்கப் போகுது-ன்னு தெரியுமா?
Numerology 2024 Prediction: எண்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைக் கணித்து கூறும் ஜோதிடம் தான் எண் கணிதம். இந்த எண் கணித்தில் ஒருவரது விதி எண்ணானது அவரது பிறந்த தேதியைக் கொண்டு பெறப்படுகிறது.
எப்படி ஜோதிடத்தில் 9 கிரகங்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறதோ, அதேப் போல் எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது.

ஜோதிடத்தைப் போன்றே, எண் கணிதத்திலும் ஒருவரது பிறந்த தேதியின் படி 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது. உங்களின் விதி எண் 6 என்றால், அந்த விதி எண்ணிற்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
விதி எண் 6-க்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களில் வாழ்க்கையில் சுக்கிரனின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுவும் இந்த புதிய ஆண்டில் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் ஈர்க்கும் வகையில் இருக்கும். இந்த ஆண்டில் உங்களின் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.
பேச்சாலும், அறிவாலும் பலரை ஈர்ப்பீர்கள். எங்கு சென்றாலும், அங்கு நீங்கள் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுவீர்கள். ஆனால் இந்த ஆண்டில் உங்களிடம் சற்று பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் நீங்கள் திட்டமிட்டு செய்தாலும், ஏதேனும் ஒரு காரணத்தால் யாரேனும் ஒருவரால் அது பாழாகும். எனவே மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.
2024-ல் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?
நீங்கள் யாரையேனும் காதலித்து வந்தால் அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையை தவறாக புரிந்து கொண்டு அவசரப்பட்டு பேசுவதைத் தவிர்த்தால், இந்த ஆண்டு உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல போதுமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் மற்றும் வாகனங்களை வாங்க நினைத்தால், அதற்கு இந்த ஆண்டு சராசரியாக இருக்கும்.
2024-ல் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
2024 ஆம் ஆண்டில், நீங்கள் 1, 2, 4, 5 மற்றும் 8 ஆகிய எண்களால் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். தொழில் ரீதியாக, உங்கள் கடின உழைப்பைப் பொறுத்தே எந்த ஒரு பலனையும் இந்த ஆண்டில் பெறுவீர்கள். எண் 5-ன் உதவியால் இந்த ஆண்டில் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள நபருடன் நட்புறவு கிடைக்கும். இதன் விளைவாக நீங்கள் நல்ல பணத்தை சம்பாதிக்கும் மற்றும் உங்கள் தொழிலை விரிவாக்கும் வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இந்த ஆண்டு நன்றாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டில் நீங்கள் எதிர்பார்த்தவாறு நன்றாகவே இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications