Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
நியூமராலஜி படி, 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2024 எப்படி இருக்கப் போகுது-ன்னு தெரியுமா?
Numerology 2024 Prediction: எண்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைக் கணித்து கூறும் ஜோதிடம் தான் எண் கணிதம். இந்த எண் கணித்தில் ஒருவரது விதி எண்ணானது அவரது பிறந்த தேதியைக் கொண்டு பெறப்படுகிறது.
எப்படி ஜோதிடத்தில் 9 கிரகங்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறதோ, அதேப் போல் எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது.

ஜோதிடத்தைப் போன்றே, எண் கணிதத்திலும் ஒருவரது பிறந்த தேதியின் படி 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது. உங்களின் விதி எண் 5 என்றால், அந்த விதி எண்ணிற்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
விதி எண் 5-க்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த ஆண்டில் புதனின் ஆசியால் மகிர்ச்சியாக இருப்பீர்கள். மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். ஒரு வேலையைச் செய்வதற்கு முன்பும் நன்றாக யோசிப்பீர்கள். ஆனால் சில சமயங்களில் அப்படி அதிகமாக யோசிப்பதால் குழப்பமடைந்து என்ன செய்வதென்று புரியாமல் இருப்பீர்கள. இம்மாதிரியான சூழ்நிலையில் நம்பகமானவரின் ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறது.
புதிய ஆடைகள், நகைகள் போன்றவற்றை வாங்க ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் தகவல் தொடர்பு திறன் சிறப்பாக இருக்கும். உங்களின் பேச்சால் பல காரியங்களை/வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அவசரமாக எதையும் செய்யாமல், பொறுமையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
2024-ல் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?
எண் 5-க்கு உரியவர்கள் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதலால் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, தவறுகளை மன்னித்து வாழ முயற்சித்தால், காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். இந்த ஆண்டில் பொறுமையுடனும் புரிதலுடனும் உறவைத் தொடர்ந்தால், காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவை வலுப்படுத்த வேண்டுமானால், துணையுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும்.
2024-ல் தொழில் எப்படி இருக்கும்?
நியூமராலஜியின் படி, 2024 ஆம் ஆண்டில் 1, 2, 4 மற்றும் 8 ஆகிய எண்களால் பாதிக்கப்படுவீர்கள். இந்த ஆண்டில் உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். வேலையில் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காமல், சுயமாக யோசித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டும். உங்களின் அனுபவங்களின் அடிப்படையில் எப்போதும் முடிவை எடுங்கள்.
4 மற்றும் 5 ஆகிய எண்களுடன் உங்களுக்கு நன்றாக இருககும். ஆனால் 5 மற்றும் 8 ஆகிய எண்களுக்கு இடையிலான உறவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மற்ற எண்களுடனான உறவு நன்றாக இருக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு பெரிய பிரச்சனை ஏதும் இருக்காது. ஆனால் முடிவெடுக்கும் போது மட்டும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications