Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நியூமராலஜி படி, 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2024 எப்படி இருக்கப் போகுது-ன்னு தெரியுமா?
Numerology 2024 Prediction: நமது வாழ்க்கையில் எண்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைக் கணித்து கூறும் ஜோதிடம் தான் எண் கணிதம். இந்த எண் கணித்தில் ஒருவரது விதி எண்ணானது அவரது பிறந்த தேதியைக் கொண்டு பெறப்படுகிறது.
எப்படி ஜோதிடத்தில் 9 கிரகங்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறதோ, அதேப் போல் எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது.

ஜோதிடத்தைப் போன்றே, எண் கணிதத்திலும் ஒருவரது பிறந்த தேதியின் படி 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது. உங்களின் விதி எண் 4 என்றால், அந்த விதி எண்ணிற்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
விதி எண் 4-க்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
ஒரு மாதத்தின் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த எண்ணின் அதிபதி ராகு என்பதால், இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த ஆண்டில் பெரும்பாலும் ஒருவித குழப்பத்துடனேயே இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் விரைவில் தங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அனைத்து விஷயங்களும் இவர்களுக்கு திடீர் திடீரென்று நடக்கும். இந்த ஆண்டில் ஒருசிறந்த மற்றும் திறமையான வழிகாட்டியால் இவர்கள் வழிநடத்தப்பட்டால், புரட்சிகரமான ஒன்றை செய்வார்கள். அதே சமயம் இவர்களுடன் தவறான நபர்களின் நட்பு இருந்தால், இவர்களின் செயல்களும் தவறாகவே இருக்கும்.
2024-ல் எண் 4-க்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?
இந்த எண் 4-க்கு உரியவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், சிறப்பாக இருக்கும். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் நன்கு புரிந்து இருப்பீர்கள். இருப்பினும், திருமணமானவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், இந்த ஆண்டு காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். முக்கியமாக பொறுமையாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களை புரிந்து நடந்து கொண்டால், குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
2024-ல் எண் 4-க்கு தொழில் எப்படி இருக்கும்?
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, மற்றவர்களின் முடிவுகளைக் கேட்டு நீங்கள் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால், பெரிய பண பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இல்லாவிட்டால் நிதி சிக்கலில் சிக்குவீர்கள். சுயமாக தொழிலைத் தொடங்க நினைத்தால். இந்த ஆண்டில் தொடங்கினால் நல்ல வெற்றியைப் பெறலாம். ஆனால் நிதி விஷயங்களில் எந்த ரிஷ்க்கையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. சொத்து தொடர்பான விஷயங்களை நன்கு ஆராய்ந்த பின்னர் முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications