Latest Updates
-
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்...
இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாசத்துல பண மழை கொட்டப் போகுது... உங்களோட பிறந்த தேதி என்ன?
November Month Numerology Predictions 2023: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
எப்படி ராசிகளுக்கு கிரக அதிபதிகள் உள்ளார்களோ, அதேப் போல் 1 முதல் 9 வரையிலான எண்களுக்கும் அதிபதிகள் உள்ளனர். இந்த அதிபதிகளை வைத்து தான் அந்த எண்ணிற்கு உரியவர்களைப் பற்றி கணித்து கூறப்படுகிறது. ஒருவரது பிறந்த தேதி அந்நபரின் வாழ்க்கை பற்றிய பல ரகசியங்களை வெளிப்படுத்தும்.

நீங்கள் வரவிருக்கும் நவம்பர் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி நவம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதமானது அற்புதமாக இருக்கும். இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, இனிமையாக இருக்கும்.
நிதி நிலை வலுவாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். அனைத்து முக்கியமான வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய நினைத்தால், நல்ல பலனைப் பெறலாம். இந்த மாதத்தில் நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள். இருப்பினும் அவசரத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதலிப்பவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்யலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் வீட்டு பெரியோர்களின் ஆதரவையும், பாசத்தையும் பெறுவார்கள். சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
வாழ்க்கைத் துணையுடன் நீண்ட நாட்களாக பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த மாதத்தில் அதை சரிசெய்ய முயற்சி செய்தால், பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கை சூப்பராக இருக்கும். மாத இறுதியில் ஒரு பெரிய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். பல புதிய நண்பர்களை இம்மாதத்தில் பெறுவீர்கள்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் வாழ்க்கையை ஒரு புதிய முன்னேற்ற திசையில் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இருந்தாலு, முன்னேற்றத்தைக் காண கடினமாக உழைக்க வேண்டும்.
யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்குவீர்கள். எதிரிகளிடம் இம்மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிராக அவர்கள் பல சதிகளை செய்வார்கள். மொத்தத்தில், இம்மாதத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால், நன்றாக இருக்கும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதமானது வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, இம்மாதத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
வணிகர்கள் சில நன்மைகளைப் பெறக்கூடும். வணிகத்தை விரிவாக்க திட்டமிட்டிருந்தால், இம்மாதத்தில் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இம்மாதம் சிறப்பானதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இம்மாதத்தில் ஒரு நல்ல வரன் கிடைக்கலாம்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் கோபத்தையும், ஈகோவையும் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் வேலை மோசமடையக்கூடும். வேலையைப் பொறுத்தவரை, இம்மாதம் பிஸியாக இருப்பீர்கள்.
மாத இறுதியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை வைத்திருக்க முயற்சிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். இதனால் இருவருக்கும் இடையேயான உறவு வலுபெறும்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதமானது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தேவையற்ற விஷயங்களின் நேரத்தை வீணாக்காமல் இருப்பது நல்லது. அவசரமாக செய்யும் வேலைகள் தவறான முடிவுகளைத் தரும்.
எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். நிதி நிலை பலவீனமாக இருக்கும். நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். சிக்கனமாக செலவுகளை செய்ய வேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நேர்மறையான முடிவுகளைப் பெறுவார்கள். இம்மாதத்தில் மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் இருப்பார்கள்.
பணிபுரிபவர்கள் மற்றும் வணிகர்கள் இம்மாதத்தில் தங்கள் வேலையில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு பெரிய ஆர்டர் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் தங்களின் இலக்குகளில் கவனம் செலுத்துவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











