Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நவம்பர் மாதம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் மோசமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Unlucky Zodiac Signs In November 2023: நவம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, நவம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன.
கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக ஒரு மாதத்தில் நுழையும் போது, அந்த மாதமானது கடந்த மாதத்தை விட சிலருக்கு நல்லதாகவோ, சிலருக்கு மோசமானதாகவோ இருக்கலாம்.

அந்த வகையில் நவம்பர் மாதத்தில் கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாகவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்த மோசமான அல்லது துரதிர்ஷ்டமான மாதமாகவோ இருக்கப் போகிறது. இப்போது 2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான மாதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த வேலையையும் அவசரமாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உறவுகளில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
இந்த மாதத்தில் அன்புக்குரியவர்களிடம் இருந்து ஆதரவு எதுவும் கிடைக்காது. மனம் எப்போதும் ஒருவித கலக்கத்துடன் இருக்கும். சிறு விஷயங்களுக்கும் அதிகமாக கோபப்படுவீர்கள். இதனால் நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் ரீதியாக, இந்த மாதம் கடினமாக இருக்கும். ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். உங்களின் முக்கியமான வேலை தடைபடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் உங்களால் என்ன முயற்சி செய்தாலும் வெற்றி பெற முடியாது. எதிர்மறை எண்ணங்களால் சூழ்ந்திருப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தத்தால் உங்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். நிதி ரீதியாக, பண விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆடம்பர செலவுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுவீர்கள். இந்த மாதத்தில் உங்களின் தன்னம்பிக்கை குறையும். வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையும். சிலருக்கு பெரிய இழப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். நீதிமன்ற வழக்குகள் உங்களை தொந்தரவு செய்யும். நிறைய அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த மாதம் பல ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications