Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம்
நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரங்கள நாலா பக்கமும் கஷ்டம் சூழப்போகுதாம்... உடம்ப இரும்பாக்கிக்கோங்க...!
November Horoscope 2023: 2023 கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது, நவம்பர் மாதமும் பிறந்து விட்டது. நவம்பர் கிரிகோரியன் நாட்காட்டியின் பதினொன்றாவது மாதமாகும், மேலும் இது இலக்குகளை நிர்ணயிக்க ஊக்குவிக்கிறது. எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு பலன் கிடைக்கும் என்பதால், அனைத்து விதமான புதிய தொடக்கங்களுக்கும் இதுவே சரியான நேரம்.
ஆனால் வாழ்க்கையில் புதிதாக எதையும் தொடங்குவதற்கு முன், உங்கள் ராசியை சரிபார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு கிரக மாற்றங்களால் துரதிர்ஷ்டமான மாதமாக இருக்கப்போகிறது.

அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் துரதிர்ஷ்டமான மாதமாக இருக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
நவம்பர் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு வேலை அழுத்தம் மற்றும் பிரச்சனைகள் ஏற்படலாம் மற்றும் வியாபாரப் போட்டியும் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் சீரான வழக்கத்தைப் பேணுவதும், இந்த மாதத்தில் புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.
மாணவர்கள் சராசரி கல்வி செயல்திறன் மற்றும் கவனக்குறைவு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம், இது உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் சில தடங்கல்கள் ஏற்படலாம் மற்றும் ஏமாற்றங்களால் மணமுறிவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் நீங்கள் எதையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்.
இது தவிர, நிதி சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பிருப்பதால் அவர்கள் எதிர்பாராத நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். இதனால் மனஅழுத்தத்தால் சில ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் கலவையான பலன்கள் இருக்கும், மேலும் அவர்கள் வேலை மற்றும் மேலதிகாரிகளின் வேலை அழுத்தத்தை தாங்க வேண்டியிருக்கும், இது வேலையில் உங்கள் செயல்திறனை பாதிக்கலாம்.
மேலும், வணிகர்கள் நல்ல லாபத்தை சந்திக்க முடியாமல் போகலாம். கல்விரீதியாக, கன்னி ராசிக்காரர்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அவர்கள் தங்கள் கல்விப் படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் கடினமாக இருக்கலாம். கன்னி ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையிலும் பல சிக்கல்களை சந்திக்கலாம், இது சண்டைகள் மற்றும் கோபத்திற்கு வழிவகுக்கும். காதலர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் காதல் தருணங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்.
விருச்சிகம்
தொழில்ரீதியாக, இந்த மாதம் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு கலவையான தாக்கத்தை ஏற்படுத்தும். வெற்றி கிடைக்க அதிக நேரம் தேவைப்படலாம், உங்கள் வேலையில் பிழைகள் மற்றும் குறைபாடுகள் ஏற்படலாம், மேலும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். விருச்சிக ராசி மாணவர்கள் கவனக் குறைவையும், படிப்பில் ஆர்வமின்மையையும் சந்திக்க நேரிடும்.
குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், குடும்ப சண்டைகள் மற்றும் சொத்து பிரச்சினைகள் இருக்கலாம், இது உறவு சிக்கல்கள் மற்றும் அகங்கார மனப்பான்மைக்கு வழிவகுக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிக அனுகூலமானதாக இருக்காது. அவர்கள் தங்கள் உறவில் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக முயற்சிக்க வேண்டியிருக்கும்.
கும்பம்
தொழில் வாழ்க்கையில், கும்ப ராசிக்காரர்களுக்கு வேலை அழுத்தம் அதிகரிப்பதால் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடும், அத்துடன் அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வு வாய்ப்புகள் கிடைக்காமல் நீங்கள் சிரமப்பட நேரிடும். வியபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாது, மேலும் நஷ்டத்தை சந்திக்கவும் நேரிடலாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாத கணிப்புகளின் படி மாணவர்கள் மிகவும் சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் ஒரு விரும்பத்தகாத சூழல் இருக்கலாம், அது அவர்களின் படிப்பை பாதிக்கலாம். திருமணம் மற்றும் காதல் உறவுகளைப் பொறுத்தவரை, சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












