Latest Updates
-
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
நவம்பரில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு புரமோசன், சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கு.. உங்க ராசி இதுல இருக்கா?
November 2023 Monthly Career Horoscope In Tamil: நவம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த நவம்பர் மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். ஜோதிடத்தின் படி, நவம்பர் மாதமானது பல ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.
குறிப்பாக தொழில் ரீதியாக நவம்பர் மாதத்தில் பல ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இப்போது 2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் தொழில் தொடர்பான பெரிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும். சில பிரச்சனைகளால் உங்கள் வேலையில் தாமதம் ஏற்படலாம். ஆனால் நிச்சயம் மாத இறுதியில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் நடத்தையால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். தொழிலில் ஏதேனும் முயற்சிகளை செய்து கொண்டிருந்தால், அதில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். இன்னும் சிலருக்கு வெளிநாடு செல்லவும் வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது உங்களுக்கு தொழில் ரீதியாக பரபரப்பாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்குமா என்ற ஒருவித சந்தேகத்துடனேயே இருப்பீர்கள். எதுவாயினும் உங்கள் வேலையில் கவனத்தை செலுத்துவதை நிறுத்த வேண்டாம். கடினமாக உழைப்பதை மட்டும் நிறுத்த வேண்டாம். அப்படி நிறுத்தாமல் செய்தால், நல்ல வெற்றியை நிச்சயம் காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது தொழில் ரீதியாக நல்ல வெற்றியைத் தரும் மாதமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். இம்மாதத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியால், விரும்பிய வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது தொழில் ரீதியாக வெற்றிகரமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். படிப்பை முடித்தவர்கள் உயர் கல்வி அல்லது வேலை என எதை தேர்வு செய்தாலும், நல்ல பலனைப் பெறக்கூடும். இம்மாதத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து நிதி ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் உங்களின் முக்கியமான வேலைகள் முடிக்கப்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது உங்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும். சிலர் விரும்பிய வேலையைப் பெறலாம். இதனால் உங்கள் மனம் சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகள் உங்கள் வீட்டில் உள்ள மூத்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் உங்களின் மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த மாதம் தொழில் ரீதியாக சற்று மோசமாக இருக்கும். உங்களால் வேலைகளில் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. சிலர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். இம்மாதத்தில் உங்கள் தொழிலில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், அனுபவசாலிகளிடம் ஆலோசனையை பெற்று அதன் பின் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் எந்த ஒரு முடிவும் உங்கள் கடின உழைப்பை அழித்துவிடும். தொழிலில் சிறப்பான பலனைப் பெற எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மேலும் உங்கள் கடின உழைப்பு உங்கள் விதியையே மாற்ற வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுக்கு கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக உங்கள் வேலையும் பாதிக்கப்படலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு நன்றாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் நடத்தை சிறப்பாக இருப்பதால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். மொத்தத்தில் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழிலில் வெற்றி காண நிறைய போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படலாம். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். இம்மாதத்தில் தொழிலில் நல்ல வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











