Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
வாஸ்துப்படி, 2025 புத்தாண்டு காலெண்டரை வீட்டின் எந்த இடத்தில், திசையில் தொங்க விடணும் தெரியுமா?
New Year 2025 Calender Vastu Tips In Tamil: 2025 புத்தாண்டு பிறக்கவுள்ளது. புத்தாண்டு பிறந்தாலே, முதலில் வீட்டில் உள்ள பழைய காலெண்டரை அகற்றிவிட்டு, புதிய காலெண்டரைத் தான் மாற்றுவோம். அப்படி காலெண்டரை மாற்றும் போது கண்ட இடங்களில் அவற்றை தொங்கவிடக்கூடாது. அவற்றை எப்போதும் சரியான திசையில், சரியான இடத்தில் தொங்க விட வேண்டும்.
ஏனெனில் வாஸ்துப்படி வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே எந்த பொருளை வீட்டில் வைத்தாலும், அதை சரியான இடத்தில், சரியான திசையை நோக்கி வைக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், அந்த வீட்டில் மகிழ்ச்சி, செல்வம் போன்றவை பெருகும். அப்படியென்றால் வாஸ்துப்படி காலெண்டரை வீட்டில் எங்கு, எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

* வீட்டில் புதிய காலெண்டரை தொங்கவிடும் போது, பழைய காலெண்டரை அப்புறப்படுத்த வேண்டும். புத்தாண்டு ஒரு புதிய தொடக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்நிலையில் பழைய காலெண்டர் கடந்த காலத்தை குறிப்பதால், அதை அப்புறப்படுத்தாமல் வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்கும்.
* முக்கியமாக பழைய காலெண்டருக்கு மேல் புதிய காலெண்டரை வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் பழைய காலெண்டரை வீட்டில் சேமித்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வாஸ்துப்படி பழைய காலெண்டர் வீட்டில் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தி, ஆரோக்கிய பிரச்சனைகள், முன்னேற்றத்தில் தடை போன்றவற்றை ஏற்படுத்தும்.
* ஒருவேளை பழைய காலெண்டரில் கடவுள்களின் படம் இருந்தால், அதை கண்ட இடத்தில் தூக்கி போடாமல், ஆற்றில் போடுங்கள்.
எந்த திசையில் காலெண்டரை வைக்க வேண்டும்?
* வாஸ்துப்படி, காலெண்டரை வைக்க சிறந்த திசை மேற்கு ஆகும். இந்த திசையானது ஆற்றல் ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் வீட்டில் பண வரவை அதிகரிக்கும்.
* அடுத்ததாக வடக்கு திசையில் காலெண்டரை வைக்கலாம். இந்த வடக்கு திசை செல்வத்தின் தெய்வமான குபேரன் குடியிக்கும் திசை. எனவே இந்த திசையில் காலெண்டரை வைக்கும் போது, அது வீட்டில் உள்ளோருக்கு பல புதிய வேலை வாய்ப்புகள், பண வரவு போன்றவற்றை கொண்டு வரும்.
எந்த இடத்தில் காலெண்டரை வைக்கக்கூடாது?
* காலெண்டரை எப்போதும் தெற்கு திசையில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டில் பண இழப்புகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே இந்த திசையை அறவே தவிர்த்திடுங்கள்.
* காலெண்டரை எப்போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு பின் அல்லது அருகில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை இந்த இடத்தில் வைத்தால், அது வீட்டில் உள்ளோரின் முன்னேற்றம் மற்றும் வெற்றியில் தடையை ஏற்படுத்தும். எனவே இந்த பகுதியிலும் காலெண்டரை வைக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications