Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்களுக்கு 2024 அதிர்ஷ்டமானதா இருக்கணுமா? அப்ப புத்தாண்டின் முதல் நாளில் இந்த உணவுகளை சாப்பிடுங்க..
New Year 2024: இன்னும் ஓரிரு நாட்களில் 2024 புத்தாண்டில் நுழையவுள்ளோம். அனைவரும் இந்த புத்தாண்டை சிறப்பாக வரவேற்க திட்டம் போட்டுக் கொண்டிருப்போம். பொதுவாக கொண்டாட்டம் என்றாலே அதில் நிச்சயம் உணவுகளும் இடம் பெறும்.
அதுவும் புத்தாண்டை வரவேற்கும் வகையிலும், அந்த ஆண்டில் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் ஈர்க்கும் வகையிலும் ஒருசில உணவுகளை உட்கொள்ளும் பாரம்பரியம் உலகின் பல நாடுகளில் உள்ளது.

நீங்கள் வருகிற புத்தாண்டு உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், மற்ற நாடுகளில் பின்பற்றப்படும் ஒருசில உணவு பாரம்பரியங்களை நீங்களும் பின்பற்றுங்கள்.
இப்படியான உணவு பாரம்பரியங்கள் புதிய ஆண்டை நம்பிக்கையுடனும், நேர்மறையான ஆற்றலுடனும் சுவையான வழியில் செயல்படுத்த வைப்பதாக நம்பப்படுகிறது. இப்போது 2024 ஆம் ஆண்டின் முதல் நாளில் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
1. தட்டைப் பயறு
அமெரிக்காவின் தென்பகுதியில் புத்தாண்டின் முதல் நாளில் தட்டைப் பயறு சாப்பிடும் ஒரு பாரம்பரியம் உள்ளது. இப்படி சாப்பிடுவதால் அது அந்த ஆண்டில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. ஏனெனில் இந்த சிறிய பயறுகள் செல்வத்தை பிரதிநிதிப்படுத்துவதாக கருதப்படுகிறது.
2. திராட்சை
ஸ்பெயின் மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளில், புத்தாண்டின் முதல் நாள் நள்ளிரவில் 12 திராட்சைகளை சாப்பிடும் ஒரு பாரம்பரிய உணவுப் பழக்கம் இருக்கிறது. இதில் ஒவ்வொரு திராட்சையும் வரவுள்ள புத்தாண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதைக் குறிக்கிறது.
3. நீளமான நூடுல்ஸ்
சீனாவில் புத்தாண்டின் முதல் நாளில் ஒரு பாரம்பரிய வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது என்னவெனில், புத்தாண்டில் முதல் நாளில் நீளமான நூடுல்ஸை உட்கொள்வது. இந்த நீண்ட நூடுல்ஸ் நீண்ட ஆயுளுடன் தொடர்புடையதாக அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர். எனவே இந்த நூடுல்ஸை புத்தாண்டில் முதல் நாளிள் உட்கொண்டால், அந்த ஆண்டு வளமாக இருக்கும் என்று அந்நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
4. மாதுளை
சில மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் கலாச்சாரங்களில் புத்தாண்டின் முதல் நாளில் மாதுளையை சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஏனெனில் மாதுளையானது செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே இந்த மாதுளையை புத்தாண்டு நாளில் உட்கொண்டால், அது அந்த ஆண்டில் செழிப்பைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
5. பன்றி இறைச்சி
ஜெர்மன் மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில், பன்றி இறைச்சியானது முன்னேற்றம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட பன்றி இறைச்சியை புத்தாண்டின் முதல் நாளில் உட்கொண்டால், அது அந்த ஆண்டில் நல்ல அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கையை உறுதியாக கொண்டு செல்லவும் வழிவகை அமைத்து தருவதாக நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications