Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
சனி, குரு மற்றும் ராகுவின் அருளால் 2025 வரை இந்த 3 ராசிக்காரர்களை யாராலும் அசைக்க முடியாதாம்..
New Year 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நவகிரகங்களில் சனி, குரு, ராகு போன்ற கிரகங்கள் மனித வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகங்களாக கருதப்படுகின்றன. ஏனெனில் இந்த கிரகங்கள் ராசியை மாற்ற நீண்ட காலம் ஆகும். இதனால் இந்த கிரகங்களின் பெயர்ச்சி முக்கியமானவையாக விளங்குகின்றன.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் சனி, ராகு, குரு ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் நிகழ்ந்தன. இன்னும் ஓரிரு வாரங்களில் 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த புத்தாண்டில் சனி பகவான் ராசியை மாற்றப்போவதில்லை. குரு பகவான் மே மாதத்தில் ராசியை மாற்றவுள்ளார்.
மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு வரை ராகு, சனி, குருவின் நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை அற்புதமாக இருக்கப் போகிறது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேஷ ராசியில் இருக்கும் குரு பகவான், மே மாதத்திற்கு பின் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
சனி பகவானின் நிலையால் நிதி நிலை வலுவடையும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். ராகுவின் நிலையால் வெளியூர் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முக்கியமாக மறைமுக எதிரியை இந்த காலகட்டத்தில் அறிவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை சிறப்பாக இருக்கப் போகிறது. சனி பகவானின் நிலையால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பல புதிய பொறுப்புக்கள் அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும். கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும்.
குரு பகவானால் சுப செலவுகள் அதிகமாகும். அதுவும் வீடு, வாகனம், சொத்து போன்றவற்றை வாங்குவதற்கு நிறைய பணத்தை செலவழிக்கக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். சிலர் எதிர்பாராத பணத்தைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சனி பகவானின் அருளால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை மங்களகரமானதாக இருக்கும். சனி பகவான் 7 ஆவது வீட்டில் இருப்பதால் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். அதோடு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
2024 ஆம் ஆண்டின் மே மாதத்தில் நிகழும் குரு பெயர்ச்சிக்கு பின், கடின உழைப்புக்கான முழு பலனும் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். ராகுவின் அருளால் கடனில் இருந்து விடுபடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











