Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ராசிப்படி, 2024 ஆம் ஆண்டில் உங்களுக்கு எந்த மாதம் அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது-ன்னு தெரியுமா?
New Year 2024: 2023 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சில நாட்களில் 2023 ஆம் ஆண்டிற்கு குட்-பை சொல்லிவிட்டு, 2024 புத்தாண்டிற்குள் நுழையவுள்ளோம். புத்தாண்டு நெருங்குவதால், பலரது மனதிலும் பலவிதமான கேள்விகள் எழும். முக்கியமாக ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டவர்கள், தங்களின் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள அதிக ஆவலுடன் இருப்பார்கள்.
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் 2024 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் நிகழும் கிரக மாற்றங்களால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

அதாவது அந்த அதிர்ஷ்டமான மாதத்தில் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும், நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கை இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இப்போது 2024 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எந்த மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த மாதம் இவர்களுக்கு அதிர்ஷ்டமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். மேலும் இந்த மாதத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து ஆசைகளும் இந்த மாதத்தில் நிறைவேறும். முக்கியமாக ஒரு பெரிய மாற்றத்தை இந்த மாதத்தில் காண்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வியாபாரம் செய்து வந்தால், இந்த மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இது தவிர சிலர் புதிய வேலைகளைத் தொடங்கி நல்ல பலனைப் பெறக்கூடும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை இந்த மாதத்தில் காண்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதமானது அற்புதமாக இருக்கும். இந்த மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். சிலருக்கு புதிய வேலையைத் தொடங்கவும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிதி ஓட்டம் சிறப்பாக இருக்கும் மற்றும் இந்த மாதத்தில் சூழ்நிலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் கனவுகள் நனவாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் நல்ல சிறப்பான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் நீண்ட நாள் கடின உழைப்புக்கான முழு பலனும் கிடைக்கும். வியாபாரிகள் தொழிலில் வளர்ச்சியைக் காண்பார்கள். உங்களின் தேவைகள், ஆசைகள், விருப்பங்கள் அனைத்தும் இந்த மாதத்தில் நிறைவேறும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இம்மாதத்தில் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதோடு வீடு, மனை வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். 2024 ஆம் ஆண்டில் புதிய வேலையை தொடங்க நினைத்தால், அதை அக்டோபர் மாதத்தில் தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் நவம்பர் மாதமானது அதிஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும். நிதி நிலை வழக்கத்தை விட நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் மே மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனதில் பல புதிய எண்ணங்கள் தோன்றும் மற்றும் இவை அனைத்தும் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் அற்புதமானதாக இருக்கும். இந்த மாதத்தில் முன்னேற்ற பாதைகள் திறக்கப்படும். அதோடு பண வரவும் இந்த மாதத்தில் நன்றாக இருக்கும். முக்கியமாக நிறைய பணத்தை இம்மாதத்தில் சேமிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் பொன்னான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அன்பானவருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக இந்த மாதம் நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் பலவற்றை சாதிப்பீர்கள். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். எதிர்பாராத பணத்தையும் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெற வாய்ப்புள்ளது. மொத்தத்தில், பிப்ரவரி மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications