Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மது பிரியர்களே! 2024-ல் இந்த நாட்களில் எல்லாம் ஒயின் ஷாப் திறக்கமாட்டாங்களாம்.. குறிச்சு வெச்சுகோங்க...
Dry Days In India In 2024 In Tamil: 2024 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. வருகிற புத்தாண்டை சிறப்பாக வரவேற்க பலரும் ஆவலுடன் இருப்போம். அப்படி புதிய ஆண்டில் நுழையும் போது அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஒருபுற மக்கள் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் அதே சமயம், மறுபுறத்தில் வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் போன்றோர் அடுத்த ஆண்டில் தேசிய விடுமுறை நாட்களில் இருந்து எத்தனை விடுமுறைகள் கிடைக்கப் போகின்றன? எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும்? என்பதை அறிய ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
அதே சமயம், குடிமகன்களை எடுத்துக் கொண்டால், வருகிற புத்தாண்டில் எந்தெந்த நாட்களில் எல்லாம் ஒயின் ஷாப் மூடியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நீங்களும் அப்படி ஆல்கஹால் பிரியர் என்றால், நிச்சயம் ஒயின் ஷாப் விடுமுறையை தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டிருப்பீர்கள். இப்போது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் எந்தெந்த நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பதைக் காண்போம். இந்த நாட்களில் பார்ட்டி எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள். பின் ஏமாந்து தான் போவீர்கள்.

ஜனவரி 2024 - 3 நாட்கள்
15 ஜனவரி, திங்கட்கிழமை - மகர சங்கராந்தி, பொங்கல் பண்டிகை
26 ஜனவரி, வெள்ளிக்கிழமை - குடியரசு தினம்
30 ஜனவரி, புதன்கிழமை - ஷாஹீத் திவாஸ் (மகாராஷ்டிராவில் மட்டும்)
பிப்ரவரி 2024 - 1 நாள்
19 பிப்ரவரி, திங்கட்கிழமை - சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (மகாராஷ்டிராவில் மட்டும்)
மார்ச் 2024 - 4 நாட்கள்
5 மார்ச், செவ்வாய்கிழமை - சுவாமி தயாநந் சரஸ்வதி ஜெயந்தி
8 மார்ச், வெள்ளிக்கிழமை - சிவராத்திரி
25 மார்ச், திங்கட்கிழமை - ஹோலி
ஏப்ரல் 2024 - 4 நாட்கள்
10 ஏப்ரல், புதன்கிழமை - ஈத்-அல்-ப்தர்
14 ஏப்ரல், சனிக்கிழமை - அம்பேத்கர் ஜெயந்தி
17 ஏப்ரல், புதன்கிழமை - ராம நவமி
21 ஏப்ரல், ஞாயிற்றுக்கிழமை - மகாவீர் ஜெயந்தி
மே 2024 - 1 நாள்
1 மே, திங்கட்கிழமை - மகாராஷ்டிரா தினம் (மகாராஷ்டிராவில் மட்டும்)
ஜூலை 2024 - 2 நாட்கள்
17 ஜூலை, புதன்கிழமை - மொஹாரம்
21 ஜூலை, ஞாயிற்றுக்கிழமை - குரு பூர்ணிமா
ஆகஸ்ட் 2024 - 2 நாட்கள்
15 ஆகஸ்ட், புதன்கிழமை - சுதந்திர தினம்
26 ஆகஸ்ட், திங்கட்கிழமை - ஜன்மாஷ்டமி
செப்டம்பர் 2024 - 2 நாட்கள்
7 செப்டம்பர், சனிக்கிழமை - விநாயகர் சதுர்த்தி (மகாராஷ்டிராவில் மட்டும்)
17 செப்டம்பர், செவ்வாய்க்கிழமை - ஈத்-இ-மிலாத்
அக்டோபர் 2024 - 4 நாட்கள்
02 அக்டோபர், செவ்வாய்கிழமை - காந்தி ஜெயந்தி
08 அக்டோபர், திங்கட்கிழமை - தடை வாரம் (மகாராஷ்டிராவில் மட்டும்)
12 அக்டோபர், சனிக்கிழமை - தசரா
17 அக்டோபர், வியாழக்கிழமை - மகரிஷி வால்மீகி ஜெயந்தி
நவம்பர் 2024 - 3 நாட்கள்
01 நவம்பர், வெள்ளிக்கிழமை - தீபாவளி
12 நவம்பர், செவ்வாய்கிழமை - கார்த்திகை ஏகாதசி
15 நவம்பர், வெள்ளிக்கிழமை - குரு நானக் ஜெயந்தி
டிசம்பர் 2024 - 1 நாள்
25 டிசம்பர், செவ்வாய்க்கிழமை - கிறிஸ்துமஸ்



Click it and Unblock the Notifications