Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்..
2024-ல் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியையும், சம்பள உயர்வையும் பெறப் போறாங்க..
New Year 2024 Horoscope: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2024 ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கவுள்ளது. இந்த ஆண்டில் நீங்கள் உங்கள் தொழிலில் பல சிரமங்களையும், முன்னேற்றம் எதுவும் காணாமல் இருந்திருந்தால், நிச்சயம் வருகிற புத்தாண்டு தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும்.
2024 ஆம் ஆண்டில் சனி, ராகு மற்றும் கேதுவைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களின் நிலைகளிலுமே மாற்றங்கள் ஏற்படவுள்ளது. இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதுவும் தொழிலைப் பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாகவும், முன்னேற்றத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கப் போகிறது. சிலருக்கு இந்த ஆண்டில் வருமானத்தில் உயர்வு ஏற்படப் போகிறது. இப்போது 2024 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்க 2024 ஆம் ஆண்டு மங்களகரமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த ஆண்டில் பல ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இந்த ராஜயோகங்கள் பல நன்மைகளை வழங்கவுள்ளன. முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெறுவார்கள்.
வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருந்தால், புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக பல பெரிய பிரச்சனைகள் இந்த ஆண்டில் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு சூப்பராக இருக்கப் போகிறது. இந்த ஆண்டில் பலவிதமான மகிழ்ச்சிகளையும், வெற்றிகளையும் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், இந்த ஆண்டில் அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
தொழில் ரீதியாக இந்த ஆண்டில் பல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண ஆதாயத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கப் போகிறது. தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புக்கள் உள்ன.
வியாபாரத்தில் இருப்பவர்கள் 2024 ஆம் ஆண்டில் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலில் எடுக்கும் முடிவுகளில் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications