Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சனி பகவானின் அருளால் 2024-ல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படப் போகுது...
New Year 2024 Horoscope: ஜோதிடத்தின் படி, ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிமான் தான் சனி பகவான். இந்த சனி கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகும். சனி பகவான் ராசியை மாற்றுவதற்கு சுமார் 2 1/2 ஆண்டுகள் ஆகும். நீண்ட காலம் சனி பகவான் ஒரு ராசியில் பயணிப்பதால், அதன் தாக்கம் மனித வாழ்க்கையில் சற்று ஆழமாக இருக்கும்.
தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். வருகிற 2024 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியிலேயே பயணிக்கவுள்ளார். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் சொந்த ராசியில் பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கப் போகிறது.

இந்த புதிய ஆண்டில் சனி பகவான் ராசியை மாற்றாவிட்டாலும், அஸ்தமனமாகி உதயமாகவுள்ளார். இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படுவதால் சில ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளால் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் அருளால் சிறப்பாக இருக்கப் போகிறது. முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் வேலையால் மகிழ்ச்சியடைவார்கள்.
வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இந்த ஆண்டில் தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம். நிதி நிலை இந்த ஆண்டில் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சனி பகவானின் அருளால் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆசியால் அட்டகாசமாக இருக்கப் போகிறது. நீண்ட நாட்களாக வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், 2024 ஆம் ஆண்டில் அது நிறைவேறும் வாய்ப்புள்ளது. சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். கடின உழைப்பிற்கான முழு பலன் இந்த ஆண்டில் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் சனி பகவானின் அருளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஆண்டாக இருக்கும். முக்கியமாக சனி பகவானின் ஆசீர்வாதத்தால் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான நன்மைகளைப் பெறக்கூடும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம்.
குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் தனது திறமையால் பலரது மனதைக் கவர்வீர்கள். இந்த ஆண்டில் புதிதாக ஒன்றை கற்று, அதன் மூலம் பயனடைவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நல்ல லாபத்தைத் தரும். மொத்தத்தில் இந்த ஆண்டில் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications