Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சனி பகவானின் அருளால் 2024 ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
New Year 2024 Horoscope: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒருமுறை ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும். எனவே இவரது ராசி மாற்றத்தின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சற்று அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். அதன் பின் கும்ப ராசியில் வக்ரமாகி, நவம்பர் 04 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்தார்.

கும்ப ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைந்ததோடு, இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை பயணிக்கவுள்ளார். அதுவும் 2024 ஆம் ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணிக்கும் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கவுள்ளார்.
முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் உயர்வு ஏற்படப் போகிறது, அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கப் போகிறது. சொல்லப்போனால் சனி பகவானின் அருளால் செல்வந்தராகும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் அருளால் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் இருப்பதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இந்த ஆண்டில் நிறைய லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த ஆண்டில் தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் பயணிக்கும் சனி பகவானால், 2024 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக இருக்கப் போகிறது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆளுமை மற்றவர்களை கவரும் வகையில் இருக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றியும், லாபமும் கிடைக்கும்.
நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். சனி பகவான் சச ராஜயோகத்தை உருவாக்கியிருப்பதால், 2024 ஆம் ஆண்டில் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்க வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருளால் 2024 ஆம் ஆண்டு அற்புதமாக இருக்கப் போகிறது. சனி பகவான் 9 ஆவது வீட்டில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி கிடைக்கும்.
நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். முக்கியமாக 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கு பின் பணிபுரிபவர்கள் விரும்பிய இட மாற்றம் மற்றும் பதவி உயர்வைப் பெறலாம். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications