Latest Updates
-
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சனி, குருவின் அருளால் 2024-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பா இருக்கப் போகுது.. உங்க ராசி என்ன?
New Year 2024 Horoscope: இன்னும் ஒரு மாதத்தில் புதிய ஆண்டில் நுழையவுள்ளோம். பலருக்கும் வருகிற புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். ஜோதிடத்தின் படி, 2024 ஆம் ஆண்டில் பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றவுள்ளன. ஆனால் சனி கும்ப ராசியிலும், ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் பயணிப்பார்கள்.
மேலும் ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கிறார். அதேப் போல் சனி பகவானும் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கிறார். இதனால் சனி பகவான் மற்றும் குரு பகவானின் அருளால் 2024 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அட்டகாசமாக இருக்கப் போகிறது.

அதோடு குரு பகவான் 2024 ஆம் ஆண்டின் மே மாதத்தில் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இப்படி குரு பகவானின் ராசி மாற்றத்தினால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது. இப்போது 2024 ஆம் ஆண்டில் சனி மற்றும் குரு பகவானின் அருளால் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்கப் போகிறது. அதுவும் குரு பகவானின் அருளால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மேலும் திடீர் பண ஆதாயம் கிடைப்பதோடு, நிறைய பணத்தையும் சேமிக்க முடியும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள்.
சனி பகவான் 11 ஆவது வீட்டில் இருப்பதால், தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில் குரு பகவான் மற்றும் சனி பகவானின் அருளால் வாழ்க்கை செழிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் 11 ஆவது வீட்டில் இருப்பதால், நிதி நிலை வலுவாகும். தாம்பத்ய வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கை இனிக்கும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கேதுவால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், குரு பகவானின் அருளால் அப்பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு 10 ஆவது வீட்டில் இருப்பதால், தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். மேஷ மாதத்தில் குரு ரிஷப ராசிக்கு செல்வதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
சிலருக்கு திடீர் பண வரவு ஏற்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சனி பகவானால் கடினமாக உழைக்க வேண்டியிருந்தாலும், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நன்றாக இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications