Latest Updates
-
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
2024-ல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகுது... உங்க ராசியும் இதுல இருக்கா?
New Year 2024 Horoscope: இன்னும் சில நாட்களில் புதிய ஆண்டில் நுழையவுள்ளோம். ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது நாம் அனைவரும் புதிய இலக்குகள், நம்பிக்கைகளுடன் தொடங்குவோம். மேலும் அந்த புத்தாண்டில் வாழ்க்கை பிரகாசமாக இருக்க நினைப்போம்.
ஜோதிடத்தின் படி, 2024 ஆம் ஆண்டில் பல கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் சனி பகவான் கும்ப ராசியில் பயணிப்பார். அதேப் போல் ராகு மற்றும் கேது, மீனம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பர். இது தவிர குரு பகவான் மே மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார். சனி, ராகு, கேதுவைத் தவிர, மற்ற கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், 2024 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.
குறிப்பாக நிதி ரீதியாக இந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கப் போகிறது. வெற்றி மேல் வெற்றி கிடைத்து, வாழ்க்கையே பிரகாசமாக இருக்கப் போகிறது. இப்போது நிதி ரீதியாக 2024 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை குரு பகவான் மேஷ ராசியில் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் பதவி உயர்வும், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வெளிநாட்டு பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக, இந்த ஆண்டில் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் போதுமான நேரத்தை செலவிட முடியும். சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் 9 ஆவது வீட்டில் இருப்பார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரியில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சனி பகவானின் அருளால் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
வியாபாரத்தில் நாளுக்கு நாள் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காணக்கூடும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவழிப்பீர்கள். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் அதில் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமாக இருக்கும். ஏப்ரல் வரை குரு பகவான் 5 ஆவது வீட்டில் இருப்பார். மே மாதம் முதல் 6 ஆவது வீட்டில் பயணிப்பார். இதனால் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ராகுவின் நிலையால் இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது. கேதுவின் நிலையால் வேலையில் நல்ல வெற்றியும், பணியிடத்தில் மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications