சனி பகவான் 2024-ல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பல கஷ்டங்களை தருவாராம்.. எந்த தப்பையும் பண்ணிடாதீங்க..

New Year 2024 Horoscope: 2023 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிவிட்டோம். இன்றும் ஒன்றரை மாதத்தில் 2024 ஆம் ஆண்டிற்குள் நுழைந்துவிடுவோம். ஒரு புதிய ஆண்டிற்குள் நுழையும் போது, அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும்.

ஆனால் ஒருவருக்கு நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது அனைத்துமே கிரக நிலைகளைப் பொறுத்தது. குறிப்பாக ஒருவரது வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகமான சனி பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.

New Year 2024 Horoscope: Shani Dev Will Give Trouble For These Zodiac Signs In 2024

சனி பகவான் என்றதுமே அனைவருக்கும் பயம் வரக் காரணம், இவர் பாரபட்சம் பாராமல் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். ஒருவரது செயல்கள் நன்றாக இருந்தால், அவரை சனி பகவான் செல்வந்தராக்குவார். அதுவே கெட்ட செயல்களை செய்பவர்களுக்கு சனி பகவான் எதிர்பாராத அளவில் கஷ்டங்களையும், சவால்களையும் வழங்குவார்.

கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவானால் 3 ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும், 2 ராசிக்காரர்களுக்கு அஷ்டம, அர்த்தாஷ்டம சனியும் நடைபெற்று வருகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். மேலும் சனி பகவானின் கோபத்தை அதிகரிக்காமல் இருக்க எந்த மாதிரியான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் காண்போம்.

கடகம்

2023 ஆம் ஆண்டின் நவம்பர் 04 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்த சனி பகவான் 2024 ஆம் ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணிப்பதால், கடக ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். எனவே இந்த ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டில் எந்த ஒரு புதிய வேலைகளையும் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாக நேரிடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கும் 2024 ஆம் ஆண்டின் சனி பகவானின் தாக்கம் இருக்கும். இப்படி ஒரு ஆண்டு முழுவதும் சனி பகவானின் தாக்கம் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் வாகனத்தை ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முடிந்தால், வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் விபத்துக்களை சந்திக்க நேரிடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இந்த ஆண்டில் தங்கள் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை யாருக்கும் உதவாமல் இருந்தாலும், இந்த புதிய ஆண்டில் யாரேனும் உதவி கேட்டு வந்தால், அவர்களுக்கு உதவ தயங்காதீர்கள். நிறைய தொண்டுகளை செய்வதன் மூலம், உங்களின் புண்ணியம் தான் அதிகரிக்கும்.

கும்பம்

என்ன தான் சனி பகவான் கும்ப ராசியின் அதிபதியாக இருந்தாலும், இந்த ராசிக்காரர்களுக்கும் ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடக்கியது. ஏழரை சனியின் மோசமான தாக்கத்தைக் குறைக்க விரும்பினால், சனி பகவானுக்கு உரிய ஸ்தோத்திரத்தை எப்போதும் சொல்லிக் கொண்டே இருங்கள். மேலும் யாருடனும் சண்டைகளை போடாதீர்கள். இல்லாவிட்டால் பகை இன்னும் தீவிரமாகிவிடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் 2 ஆவது முதல் கட்டம் நடக்கியது. இதனால் 2024 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கும். இந்த ஆண்டில் இவர்கள் வாயைக் கட்டிப் போட வேண்டும். இல்லாவிட்டால் பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, November 16, 2023, 8:00 [IST]
Desktop Bottom Promotion