2024-ல் உங்க ராசிப்படி எந்த மாசம் அதிர்ஷ்டமானதா இருக்கும்-ன்னு தெரியுமா?

New Year 2024 Horoscope: 2023 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். 2024 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில், பலருக்கும் வருகிற புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். ஒருவரது எதிர்காலத்தை கணிக்க ஜோதிடம் பெரிதும் உதவி புரிகிறது.

ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகளைக் கொண்டு தான் ஒருவருக்கு நடக்கவிக்கும் நல்லது, கெட்டது கணிக்கப்படுகிறது. பொதுவாக கிரக நிலைகளானது ஒவ்வொரு மாதமும் மாறுபடும். அப்படி மாறுவதால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும்.

New Year 2024 Horoscope: Lucky Month For 12 Zodiac Signs In 2024 In Tamil

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் கிரக நிலைகளைப் பொறுத்தவரை சில மாதம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதாவது, இந்த மாதத்தில் இவர்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கும், இம்மாதத்தில் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியடையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும், பண வரவு சிறப்பாக இருக்கும் மற்றும் இதுப்போன்ற பல நல்லது நடக்கும்.

நீங்கள் உங்கள் ராசிக்கு 2024 ஆம் ஆண்டின் எந்த மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் மாதம் மிகவும் நன்றாக இருக்கும். அதுவும் இந்த மாதமானது அதிர்ஷ்டமானதாக, மகிழ்ச்சியைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். அதோடு இந்த மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், மொத்தத்தில் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணக்கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் ஏதாவது புதிய வேலையைத் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதை இந்த மாதத்தில் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் இந்த மாதத்தில் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதமானது அற்புதமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் இவர்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் தேடி வரும். இந்த மாதத்தில் புதிய விஷயங்களை மேற்கொள்ளும் போது, அது நன்கு வெற்றிகரமாக முடிவடையும்.

கடகம்

நீங்கள் கடக ராசியைச் சேர்ந்தவரா? 2024 ஆம் ஆண்டில் எந்த மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் உங்களுக்கு 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும், பண வரவு அதிகமாக இருக்கும், சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக உங்களின் கனவுகள் இம்மாதத்தில் நிறைவேறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பல நன்மைகளை வாரி வழங்கும் மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் நீண்ட நாள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் இந்த மாதத்தில் தேவைகள், விருப்பங்கள், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் இவர்கள் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மேலும் உறவுகளுக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சிறந்த மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களைப் பெறலாம். ஏதாவது ஒரு புதிய வேலையை 2024 ஆம் ஆண்டில் தொடங்க நினைத்தால், அதை அக்டோபர் மாதத்தில் தொடங்குங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். வழக்கத்தை விட நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியைச் சேர்ந்தவர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் மே மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் பணியிடத்தில் பாராட்டுக்களைப் பெறுவதோடு, பலவிதமான பரிசுகளைப் பெறக்கூடும். இம்மாதத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பல புதிய யோசனைகள் மனதில் தோன்றும் மற்றும் அந்த யோசனைகள் அனைத்தும் வாழ்க்கையை சிறப்பானதாக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் மாதமாக இருக்கும். இந்த மாதம் மிகவும் மகிழ்ச்சியானதாக, முன்னேற்ற பாதைகளைத் திறக்கும் மாதமாக இருக்கும். மேலும் இந்த மாதத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் பொன்னான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அன்பானவருடன் நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பானதாக இருக்கும். மொத்தத்தில் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் பல வெற்றிகளைக் குவிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பணத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வாழ்க்கையை மாற்றும் மாதமாக பிப்ரவரி மாதம் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, November 18, 2023, 17:50 [IST]
Desktop Bottom Promotion