Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
உங்க பெயர் A என்ற எழுத்தில் தொடங்குதா? அப்ப உங்க குணம் எப்படி இருக்கும் தெரியுமா?
Name Starts With A Personality Traits: எப்படி ஒருவரது பிறந்த தேதி, ராசி போன்றவை அந்நபரின் குணாதியங்கள், எதிர்காலம் போன்ற பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியுமோ, அதேப் போல் ஒருவரது பெயரின் முதல் எழுத்தும் அந்நபரின் ஆளுமையை பற்றி தெரிந்து கொள்ள உதவும் என்பது தெரியுமா? ஆம் எழுத்துகளும் ஜோதிடத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. அதுவும் ஒருவரது பெயரின் முதல் ஆங்கில எழுத்து அந்நபரின் குணத்தை பற்றி தெரியப்படுத்தும்.
உங்களின் பெயர் A என்ற எழுத்தில் தொடங்குகிறதா? இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே A என்ற எழுத்தில் பெயரைக் கொண்டவர்களின் ஆளுமை எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவர்கள்
A என்ற எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள் இயற்கையாகவே கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் பார்வையை ஈர்க்கும் வகையிலான அழகுடன் இருப்பார்கள் மற்றும் அழகாக இருக்கும் நபர்களால் ஈர்க்கப்படுவார்கள். அதோடு இவர்களின் குணங்களும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் தான் இருக்கும். கூர்மையான மற்றும் அழகான கண்களைக் கொண்டிருப்பார்கள். இந்த எழுத்தில் பெயரைக் கொண்ட பெண்கள் தங்கள் அழகில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.
பொறுமைசாலிகள்
A என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் பொறுமைசாலிகள். இருப்பினும் தோற்கடிக்கப்படுவதை விரும்பமாட்டார்கள். பிரச்சனை என்றால், அப்பிரச்சனைக்கு விரைவில் சிறந்த தீர்வுகளை காணும் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு சூழ்நிலையையும் புரிந்து நடந்து கொள்வார்கள். இவர்களுக்கு ஒரு விஷயம் அவ்வளவு எளிதில் பிடிக்காது. அதை விரும்ப நிறைய நேரம் எடுக்கும்.
கடின உழைப்பாளிகள்
A என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்ட நபர்கள் தங்கள் வேலையை ஒருபோதும் தள்ளிப்போடமாட்டார்கள். சில நேரங்களில் சோம்பேறியாக இருந்தாலும், தங்கள் தொழிலை பாதிக்கும் வகையில் சோம்பேறித்தனமாக இருக்கமாட்டார்கள். உடலுக்கு ஓய்வு வேண்டும் என்ற நேரத்தில் மட்டும் தான் சோம்பேறியாக இருப்பார்கள். மற்றபடி இவர்கள் கடின உழைப்பாளிகள், வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
நல்ல நண்பர்கள்
A என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். நட்புக்கு மரியாதை அளிப்பார்கள். நண்பர்களுக்கு நல்ல விசுவாசமாக இருப்பார்கள். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் முன், மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப வெளிப்படுத்துவார்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல இணக்கத்தை பகிர்ந்து கொள்வார்கள். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் தனது துணையுடனான உறவை அவ்வளவு எளிதில் முறிக்கமாட்டார்கள். முடிந்த வரை சரிசெய்யவே முயற்சிப்பார்கள்.
தொழில் சார்ந்தவர்கள்
A என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்களின் தொழில் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், ஒருபோதும் சமரசம் செய்யமாட்டார்கள். பணியிடத்தில் கொடுக்கப்படும் இலக்கை அடைய கடினமாக உழைப்பார்கள். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், அதை தாங்களாகவே செய்து முடிப்பார்கள். மற்றவர்களை ஒருபோதும் சார்ந்திருக்கமாட்டார்கள். வலுவான பேச்சாற்றலைக் கொண்டிருப்பார்கள். பேச்சால் வேலைகளை திறம்பட செய்து முடிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications