உங்க பெயரை சொல்லுங்க.. உங்களோட குணம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...

Name Numerology: ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு, அந்நபரின் குணாதிசயம், எதிர்காலம் போன்ற பலவற்றை அறியலாம். எப்படி ஒருவரது பிறந்த தேதி அந்நபரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேப் போல் ஒருவரின் பெயரும் அந்நபரின் வாழ்க்கை மற்றும் குணாதிசயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒருவரது பெயரை கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் பெயர் எண் கணிதம். இந்த பெயர் எண் கணிதம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது மற்றும் இன்றும் மக்களை கவர்ந்திழுக்கிறது.

Name Numerology What Your Name Says About Your Personality

பெயர் எண் கணிதத்தின் படி, ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு:

* A, J, S - 1
* B, K, T - 2
* C, L, U - 3
* D, M, V - 4
* E, N, W - 5
* F, O, X - 6
* G, P, Y - 7
* H, Q, Z - 8
* I, R - 9

நீங்கள் உங்களின் பெயருக்கு உரிய எண்ணைக் கண்டறிய, உங்கள் பெயரின் ஒவ்வொரு எழுத்தையும், எண்ணாக மாற்றி, அந்த எண்களை, கூட்டி ஓற்றை இலக்க எண்ணாக மாற்ற வேண்டும். ஆனால் 11, 22, 33 போன்ற இரண்டு இலக்க எண்களைப் பெற்றால், அதை மாற்றக்கூடாது. உதாரணமாக, RAJU என்ற பெயரை எடுத்துக் கொண்டால், அந்த ஒவ்வொரு எழுத்துக்குரிய எண்ணையும் எழுதிக் கொள்ள வேண்டும். R-9, A-1, J-1, U-3 என எழுதி, 9+1+1+3 = 14 -> 1+4=5. அதாவது, இந்த RAJU என்ற பெயருக்குரிய எண் 5. இதுப்போல் உங்கள் பெயருக்குரிய எண்ணை கண்டறிந்து கொள்ள வேண்டும். இப்போது 1 முதல் 9 வரையிலான எண்ணுக்குரிய குணத்தை காண்போம்.

எண் 1

எண் 1 சுதந்திரம், உறுதிப்பாடு, லட்சியம் ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே இந்த எண்ணைக் கொண்டவர்கள் இயற்கையாகவே ஒரு சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு குழுவை சிறப்பாக வழிநடத்தும் திறனைக் கொண்டிருப்பார்கள்.

எண் 2

எண் 2 ஒத்துழைப்பு, உணர்திறன் மற்றும் சமநிலையைக் குறிக்கிறது. எனவே இந்த எண்ணைக் கொண்டவர்கள் சற்று சென்சிடிவ்வானவர்கள். எதிலும் சமாதானமாக செல்ல விரும்புவார்கள். கூட்டு தொழில் செய்வதில் வல்லவர்களாக இருப்பர்.

எண் 3

எண் 3 படைப்பாற்றல், வெளிப்பாடு மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. எனவே இந்த எண்ணைக் கொண்டவர்கள் நல்ல படைப்பாற்றலைக் கொண்டிருப்பார்கள். நடனம், பாட்டு, நடிப்பு போன்ற கலைகளில் சிறந்தவர்களாக இருப்பார்கள். முக்கியமாக இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தொடர்பு கொள்வதில் சிறந்தவர்கள்.

எண் 4

எண் 4 நடைமுறை, நம்பகத்தன்மை, கடின உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே இந்த எண்ணைக் கொண்டவர்கள் சற்று ஒழுக்கமானவர்கள் மற்றும் நம்பிக்கையானவர்கள். இதனால் இவர்களுடன் நட்பு கொள்ள பலரும் விரும்புவர். கடினமாக உழைக்கக்கூடியவர். கொடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டார்கள்.

எண் 5

எண் 5 சுதந்திரம், ஆர்வம் ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே இந்த எண்ணைக் கொண்டவர்கள் சற்று சுந்திரமாக இருக்க நினைப்பார்கள். தனக்கு பிடித்ததை செய்வார்கள். வாழ்க்கையில் மாற்றங்களை விரும்புவார்கள். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

எண் 6

எண் 6 பொறுப்பு, வளர்ப்பு மற்றும நல்லிணக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே இந்த எண்ணைக் கொண்டவர்கள் மிகவும் பொறுப்பானவர்கள். கருணை உள்ளம் கொண்டிருப்பார்கள். பெற்றோர், குடும்பத்தை அதிகம் சார்ந்திருப்பார்கள்.

எண் 7

எண் 7 ஆன்மீகம், ஞானம் ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே இந்த எண்ணைக் கொண்டவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். நல்ல புத்திசாலி. நிறைய தத்துவம் பேசுவார்கள்.

எண் 8

எண் 8 வெற்றி, அதிகாரம், பொருட் செல்வம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் எதிலும் வெற்றி காண விரும்புவார்கள். சற்று அதிகாரத்துடன் நடந்து கொள்வார்கள். நிறைய பொருட்செல்வத்தைக் கொண்டிருக்க விரும்புவார்கள். திறமையானவர்கள். தங்கள் இலக்குகளை அடையும் லட்சியத்துடன் இருப்பார்கள்.

எண் 9

எண் 9 இரக்கம், பெருந்தன்மை மற்றும் லட்சியம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த எண்ணிற்கு உரியவர்கள் தொண்டுகளில் அதிகம் ஈடுபடுவார்கள். அதிக இரக்க உள்ளம் கொண்டிருப்பார்கள். உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள்.

எண் 11

எண் 11 உள்ளுணர்வு, ஞானம், உத்வேகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் ஆழ்ந்த உள்ளுணர்வைக் கொண்டிருப்பார்கள். நல்ல ஞானம் மற்றும் உயர்ந்த ஆன்மீக நோக்கத்தைக் கொண்டிருப்பார்கள்.

எண் 22

எண் 22 பார்வை, நடைமுறை மற்றும் சேவை ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் பெரிய விஷயங்களை சாதிக்கும் திறனைக் கொண்டிருப்பார்கள்.

எண் 33

எண் 33 இரக்கம், பிறருக்கு வழிகாட்டுவது ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த எண் சற்று அரிதானது மற்றும் இது நிபந்தனையற்ற அன்பையும் ஆன்மீக வழிகாட்டுதலையும் உள்ளடக்கியது.

ஒருவரது பெயருக்குரிய எண் அந்நபரின் ஆளுமை மற்றும் திறமைகளை வெளிப்படுத்துகிறது. எனவே உங்கள் பெயருக்கு உரிய எண்ணை அறிந்து, உங்கள் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, January 8, 2025, 22:14 [IST]
Desktop Bottom Promotion