Latest Updates
-
வார ராசிபலன் (25 October 2026-31 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
Aippasi Annabhishekam 2026: ஐப்பசி அன்னாபிஷேகம் அன்று சிவனுக்கு எந்தெந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்? -
குரு பெயர்ச்சி 2026: கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா? -
தலைமுடி எலிவால் மாதிரி இருக்கா? அப்ப இந்த விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
November 2026 Lucky Zodiac Signs: நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமானதா இருக்கும்... -
வெண்டைக்காயை இப்படி புதுமையான சுவையில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டாப் 5 அரிசி வகைகள் இதாங்க.. எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..! -
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
அக்டோபர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் வைச்சு செய்யப்போகுதாம்
15000 கோடி மதிப்புள்ள முகேஷ் அம்பானியின் வீட்டின் ஒரு மாத கரண்ட் பில் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா?
இந்தியா மட்டுமின்றி உலகளவில் மிகவும் விலையுயர்ந்த தனியார் இல்லம் என்றால் அது ஆன்டிலியாதான். இந்த மாளிகையானது இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. இந்த 27 மாடி வானளாவிய கட்டிடம் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி. ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா, பிருத்வி மற்றும் வேதா அம்பானி உள்ளிட்ட அம்பானி குடும்பத்தினரின் வசிப்பிடமாக இது உள்ளது.
மும்பையின் மிகவும் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றான ஆன்டிலியா, கும்பாலா மலையில் உள்ள அல்டமவுண்ட் சாலையில் 4,532 சதுர மீட்டர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. இந்த ஆடம்பரமான மாளிகையில், ஒரு உடற்பயிற்சி கூடம், ஸ்பா, தனியார் தியேட்டர், மொட்டை மாடி தோட்டம், நீச்சல் குளம், ஹெலிபேட், ஒரு கோயில் மற்றும் மருத்துவ வசதிகள் என இந்த மாளிகையில் இல்லாத வசதிகளே இல்லை.

இந்த அதிசய கட்டிடத்தின் மதிப்பு சுமார் ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சிகாகோவை தளமாகக் கொண்ட கட்டிடக் கலைஞர்களான பெர்கின்ஸ் மற்றும் வில் ஆகியோரால் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு 2006 மற்றும் 2010 க்கு இடையில் கட்டப்பட்டது.
ஆன்டிலியாவின் ஒவ்வொரு தளமும் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் வெவ்வேறு பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. ஆன்டிலியாவின் சமையல் நிபுணருக்கு கிட்டதட்ட மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கொடுக்கப்படுகிறது இது தவிர வேறு சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.
அனைத்துமே ஆடம்பரமாக இருக்கும் இந்த மாளிகையில் மின்சாரம் மட்டும் குறைவாகவா செலவிடப்படும்?
மின்சாரக் கட்டணத்தைப் பொறுத்தவரை, ஆன்டிலியா ஒவ்வொரு மாதமும் சுமார் 6,37,240 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இதன் அர்த்தம் என்னவெனில் ஆன்டிலியாவின் மாதாந்திர மின்சாரக் கட்டணம் சராசரியாக ரூ. 70 லட்சம் ஆகும், மேலும் பண்டிகைக் காலங்களில் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு பேய் தீவின் பெயரை நினைவு கூறும் வகையில் ஆன்டிலியாவிற்கு இந்த பெயரிடப்பட்டது. தெற்கு மும்பையின் மையத்தில் ஆன்டிலியா அமைந்துள்ளது. இந்த ஆடம்பரமான 27 மாடி கட்டிடத்தில் மூன்று ஹெலிபேடுகளும் உள்ளன. ஆன்டிலியாவின் உட்புற படங்கள் ஆன்லைனில் அதிகம் இல்லை என்றாலும், இந்த ஆடம்பரமான குடியிருப்பு 37,000 சதுர மீட்டர் அளவு மற்றும் 173 மீட்டர் உயரம் கொண்டது என்பது பரவலாக அறியப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் ஒன்பது அதிவேக லிஃப்ட், பல மாடி பார்க்கிங் அமைப்பு மற்றும் பணியாளர் விடுதிகள் கூட உள்ளன.
அம்பானி குடும்பத்தினர் தங்கள் ஆடம்பரமான இல்லத்தின் 25 தளங்களை விட்டுவிட்டு 27வது மாடியில் வசிக்கின்றனர். முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஸ்லோகா மேத்தா மற்றும் அவர்களது குழந்தைகள் பிரித்வி ஆகாஷ் அம்பானி மற்றும் வேதா ஆகாஷ் அம்பானி ஆகியோர் 27வது மாடியில் வசிக்கின்றனர்.
நீதா அம்பானி பல காரணிகளை மனதில் கொண்டு 27-வது தளத்தில் தங்க முடிவு செய்தார், இந்த தளம் ஒரு அற்புதமான காற்றோட்ட அமைப்பு மற்றும் இயற்கை சூரிய ஒளியைக் கொண்டுள்ளது. இந்த தளத்தை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இல்லை மற்றும் அம்பானி குடும்பத்தினரைத் தவிர்த்து ஒரு சிலருக்கு மட்டுமே இங்கு செல்ல அனுமதி உள்ளது. இது குடும்பத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்களின் பார்வையில் இருக்க தனித்திருக்கவும் எடுக்கப்பட்ட முடிவாகும்.



Click it and Unblock the Notifications

