Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க..
Mother's Day 2024: அன்னையர் தினத்தில் அம்மாவை ஜாலியா வெச்சுக்க நினைக்கிறீங்களா? அப்ப இத செய்யுங்க..
Mother's Day 2024: ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 12 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயின் அன்பை கொண்டாடும் விதத்திலும் அம்மாவை பெருமைப்படுத்தும் விதத்திலும் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் உங்கள் அம்மாவுடன் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடலாம். உங்கள் அம்மாவிற்கு பிடித்த விஷயங்களை பண்ணிக் கொடுக்கலாம். உங்கள் அம்மாவிற்கு பரிசுகளை வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். இந்த அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவுடன் நீங்கள் ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தை கொண்டாட நினைத்தால் அதற்கு கீழ்க்கண்ட டிப்ஸ்கள் உதவியாக இருக்கும்.

அன்னையர் தினத்தை வித்தியாசமாக கொண்டாட வழிகள்:
1. கிரியேட்டிவ் வேலைகள்
இந்த அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவுடன் சில கிரியேட்டிவ் வேலையில் நீங்கள் ஈடுபடலாம். ஓவியம் வரைதல், மட்பாண்டங்கள் தயாரிப்பு, கிராப்ட் வொர்க் போன்ற வித்தியாசமான முயற்சிகளில் நீங்கள் ஈடுபடலாம். இதன் மூலம் உங்கள் அம்மாவின் படைப்பாற்றலை நீங்கள் வெளியே கொண்டு வர முடியும்.இந்த மாதிரி செய்யும் போது உங்களுக்கும் உங்கள் அம்மாவிற்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தலாம்.
2. ஒன்றாக சமைத்தல்
இந்த அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவுடன் சேர்ந்து ஒன்றாக சமைக்கலாம். உங்கள் அம்மா நன்றாக சமைக்க கூடிய ஆள் என்றால் அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். இருவரும் ஒன்றாக சமைத்து ஒரு விருந்தை தயாரித்து ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள்.
3. ஒன்றாக படம் பார்க்கலாம்
உங்கள் அம்மாவிற்கு பிடித்த படங்களுக்கு அவங்களை அழைத்துச் செல்லலாம். இல்லையென்றால் வீட்டிலேயே பாப்கார்ன் எல்லாம் தயாரித்து ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கலாம். இருவரும் ஒருவருக்கொருவர் படம் குறித்த கலந்துரையாடலை ஈடுபடும் போது பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
4. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
உங்கள் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் அம்மாவுடன் இணைந்து உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது மற்றும் தியானம், நடனம் போன்ற விஷயங்களில் ஈடுபடலாம். மகிழ்ச்சியுடன் சேர்ந்து உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
5. ஸ்பா மசாஜ்
உங்கள் அம்மாவிற்கு வீட்டிலேயே ஒரு ஸ்பா சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கலாம். வாசனை மெழுகுவர்த்திகள், எண்ணெய்கள் இவற்றை கொண்டு ஒரு ஸ்பா சூழ்நிலையை உருவாக்குங்கள். இது அவர்களை மகிழ்விப்பதோடு ஓய்வான சூழலையும் உருவாக்குகிறது.
6. பிக்னிக் போகலாம்
உங்கள் அம்மாவிற்கு பிடித்த இடங்களுக்கு அவங்களை கூட்டிச் செல்லலாம். சிறியதாக சிற்றுண்டி, போர்வை, வாட்டர் பாட்டில் இவற்றை எடுத்துக் கொண்டு உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு ஒரு சின்ன பிக்னிக் போய்ட்டு வரலாம்.
7. டீ பார்ட்டி
உங்கள் வீட்டு பால்கனியில் அல்லது தோட்டத்தில் சிறியதாக ஒரு சிறிய டீ பார்ட்டியை ஏற்பாடு செய்யலாம். ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே இந்த டீ பார்ட்டியை நீங்கள் கொண்டாடலாம்.
8. பிடித்த பாடல்களை சேகரித்து கொடுங்கள்
உங்கள் அம்மாவிற்கு இசை மற்றும் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றால் அவர்களுக்கு பிடித்த பாடல்களை சேகரித்து கொடுக்கலாம். அவர்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் மற்றும் பாடகர் கச்சேரிக்கு அவர்களை அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் கொடுக்கலாம்.
9. புகைப்படங்கள்
உங்கள் அம்மாவிற்கு ஒரு புகைப்பட ஆல்பத்தை நீங்கள் பரிசாக கொடுக்கலாம். இதில் சிறு வயதில் இருந்து இப்போது வரை நீங்கள் அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை திரட்டி இதை நீங்கள் பரிசளிக்கலாம். ஒன்றாக அமர்ந்து அதைப் பார்த்து நீங்கள் மகிழலாம்.
10. கேக் தயாரித்தல்
உங்கள் வீட்டிலேயே அன்னையர் தினத்தை கொண்டாடும் விதத்தில் கேக் தயாரிக்கலாம். அம்மாவுடன் இணைந்து கேக் தயாரித்து அதை வெட்டி உங்கள் அன்னையர் தினத்தை நீங்கள் கொண்டாடலாம்.
11. ஷாப்பிங் போகலாம்
உங்கள் அம்மாவையும் கூட்டிக் கொண்டு அருகில் உள்ள கடைக்கு ஷாப்பிங் போய்ட்டு வரலாம். உங்கள் அம்மாவிற்கு பிடித்த பொருட்களை நீங்கள் வாங்கிக் கொடுக்கலாம். இதன் மூலம் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்.
12. காரில் பயணம் செய்தல்
உங்கள் அம்மாவை கூட்டிக் கொண்டு இரவில் காரில் ஒரு பயணம் போய்ட்டு வரலாம். இந்த பயணம் உங்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக இருப்பதோடு சந்தோஷமான தருணத்தையும் உங்களுக்கு அளிக்கும்.



Click it and Unblock the Notifications