Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
Mother's Day 2023: வீட்டில் இருந்தபடியே அன்னையர் தினத்தை எப்படி சிறப்பாக கொண்டாடலாம்? இதோ சில வழிகள்!
Mother's Day 2023: அன்னையர் தினம் என்பது மிகவும் சிறப்பான நாளாகும். இதற்காக நாம் பார்த்து பார்த்து நிறைய விஷயங்களை செய்வது உண்டு. இந்த அன்னையர் தினத்தில் உங்களால் வெளியே சென்று கொண்டாட முடியவில்லை என்றால் கூட வீட்டில் இருந்தபடியே அன்னையர் தினத்தை உங்களால் கொண்டாட முடியும்.
வீட்டில் இருந்த படியே உங்கள் அம்மாவுக்காக ஒரு ஆடம்பர இரவை நீங்கள் ஏற்பாடு செய்யலாம். உங்கள் அம்மாவுக்கு கொடுக்கின்ற பரிசு விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிறிய பரிசாக இருந்தால் கூட அதை உங்கள் இதயத்தில் இருந்து கொடுப்பது மிகவும் சிறப்பானது.

உங்கள் வீட்டையே அழகாக அலங்கரித்து இந்த அன்னையர் தினத்தை நீங்கள் கொண்டாடலாம். அந்த ஒரு நாளை உங்கள் அம்மாவுடன் நீங்கள் செலவிட்டு மகிழலாம்.
உணவிற்கு பிறகு உங்கள் சமையலறையை சுத்தம் செய்யுங்கள் : ஒவ்வொரு உணவிற்கு பிறகும் உங்கள் சமையலறையை சுத்தமாக வைப்பது வாடிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாதிரியான சிறிய வேலைகளை உங்கள் அம்மாவுக்காக அன்றைக்கு நீங்கள் செய்யலாம்.
தரைவிரிப்புகளை சுத்தம் செய்யுங்கள் : வீட்டில் உள்ள தரைவிரிப்புகள் அனைத்தையும் தூசி இல்லாமல் சுத்தம் செய்யுங்கள். நீங்கள் உங்கள் அம்மாவும் இணைந்து இந்த வேலைகளை செய்யலாம்.
இரவு உணவை தயார் செய்யலாம் : ஒரு அழகான இரவு உணவை தயார் செய்ய திட்டமிடலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.
வீட்டில் உள்ள பர்னிச்சர்களை சுத்தம் செய்யுங்கள் : வீட்டில் உள்ள பர்னிச்சர்களை சுத்தம் செய்யலாம். பர்னிச்சர்களில் உள்ள தூசிகள் மற்றும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்யுங்கள்.
துணிகளை துவைத்தல் : உங்கள் அம்மாவுடன் இணைந்து துணிகளை துவைக்க அவர்களுக்கு உதவலாம். அழுக்கு துணிகளை துவைத்து உலர வைத்து மடித்து வைக்கலாம்.
அழகான படுக்கையை உருவாக்குங்கள் : உங்கள் அம்மாவுக்காக ஒரு அழகான படுக்கையை உருவாக்கி கொடுக்கலாம். இது அன்னையர் தினத்திற்கான எளிய பரிசாக இருக்கும்.
செல்லப் பிராணிகளை சுத்தம் செய்யுங்கள் : செல்லப் பிராணிகளை நன்றாக குளிப்பாட்டி சுத்தம் செய்யுங்கள்.
கிரியேட்டிவ் அன்னையர் தின பரிசுகள் : நகம் மற்றும் பாத பராமரிப்பு : பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்மணிகள் தங்கள் நகம் மற்றும் பாத பராமரிப்பில் ஈடுபடுவதில்லை. எனவே இந்த அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவுக்கு நகம் மற்றும் பாத பராமரிப்பை மேற்கொள்ள சில விஷயங்களை செய்யலாம்.
அம்மாவுக்காக ஒரு கவிதை எழுதுங்கள் : உங்கள் அம்மாவுக்காக ஒரு கவிதை எழுதலாம். ஒரு அழகான கார்டில் உங்கள் மனதில் இருக்கும் வார்த்தைகளைக் கொண்டு இந்த கவிதைகளை நீங்கள் எழுதலாம்.
அம்மாவுக்காக ஒரு பாடல் : எல்லோருக்கும் இசை என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. உங்கள் அம்மாவுக்காக ஒரு பாடலை தேர்ந்தெடுத்து நீங்கள் பாடி மகிழலாம். உங்கள் அம்மாவுக்கு பிடித்தமான விருப்பமான பாடலைக் கூட தேர்ந்தெடுத்து பாடலாம்.
காலை உணவை கையில் கொடுங்கள் : எப்பொழுதும் உங்கள் அம்மா தான் சமையல் வேலைகளை செய்து வருகிறார்கள். அன்றைக்கு ஒரு நாள் உங்கள் அம்மாவுக்கு பிடித்த காலை உணவை தேர்ந்தெடுத்து சமைத்து கொடுக்கலாம். அவர் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே காலை உணவை தயார் செய்து கொடுங்கள்.
இரவு டின்னரை ஏற்பாடு செய்யுங்கள் : உங்கள் வீட்டை அலங்கரித்து ஒரு அழகான இரவு டின்னரை ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் அம்மாவுடன் இணைந்து அந்த இரவு டின்னரை கழிக்கலாம். ஒன்றாக தேநீர் அருந்துவது, காபி குடிப்பது போன்ற விஷயங்களை செய்து வரலாம்.
ஹோம்மேடு அன்னையர் தின பரிசுகள் : உங்களால் முடிந்த பரிசுகளை வீட்டிலேயே தயாரித்து அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவுக்கு பரிசளிக்கலாம்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீஸ் : வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சுவையான சாக்லேட் குக்கிகளை தயார் செய்து உங்கள் அம்மாவுக்கு கொடுக்கலாம். அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள்.
அழகான படத்தை வரைந்து கொடுங்கள் : உங்கள் அம்மாவுக்கு ஓவியம் என்பது பிடித்து இருந்தால் ஒரு அழகான படத்தை வரைந்து அதை பரிசாக கொடுக்கலாம். இதற்காக அவர்கள் அதிகமாக சந்தோஷப்படுவார்கள்.
கைவினைப் பொருட்களை செய்தல் : உங்கள் கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி ஒரு அழகான கைவினைப் பொருட்களை உங்கள் அம்மாவுக்கு தயார் செய்து கொடுக்கலாம். இதை உங்கள் அம்மா மிகவும் ரசிப்பார்கள்.
உங்கள் அன்பை வெளிப்படுத்தும் புத்தகம் : உங்கள் அன்பை வெளிப்படுத்தும் ஒரு புத்தகத்தை நீங்கள் தயார் செய்து கொடுக்கலாம். அதில் உங்கள் அம்மாவுக்கு பிடித்த விஷயங்கள், உங்கள் அம்மாவுடன் நீங்கள் எடுத்த புகைப்படங்கள் இவற்றை ஒட்டி பரிசளிக்கலாம்.
அன்னையர் தின கார்டு : வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி அதை அலங்காரப்படுத்தி ஒரு அழகான கவிதையுடன் ஒரு கார்டை தயார் செய்து உங்கள் அம்மாவுக்கு அதை பரிசாக வழங்கலாம். உங்கள் அன்பால் இந்த அன்னையர் தினத்தை சிறப்பாக்குங்கள்.



Click it and Unblock the Notifications