Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
Mother's Day 2023: அன்னையர் தினத்தன்று அம்மா கூட இருக்க முடியலையா? ஃபீல் பண்ணாம இத செய்யுங்க..
Mother's Day 2023: நிறைய பேர் வெளிநாட்டில் அல்லது தூரத்தில் வேலை பார்ப்பவராக இருக்கலாம். இதனால் இந்த அன்னையர் தினத்துக்கு உங்க அம்மாவை சந்திக்க முடியாமல் போகலாம். உங்களுக்கும் இந்த அன்னையர் தினத்துக்கு அம்மாவின் பக்கத்தில் இருக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கும்.
அதற்குத் தான் நாங்கள் சில தொழில்நுட்ப ஐடியாக்களை உங்களுக்கு வழங்க உள்ளோம். இதன் மூலம் இந்த அன்னையர் தினத்தில் நீங்கள் உங்கள் அம்மாவின் அருகில் இல்லாவிட்டாலும் மிகச் சிறப்பாக அன்னையர் தினத்தை கொண்டாட முடியும். உங்கள் மொபைல் வழியாகவே அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடலாம்.

நீங்களும் உங்கள் அம்மாவும் அருகில் இருப்பது போன்ற உணர்வை நீங்கள் பெறலாம். இனி உங்க அம்மாவை மிஸ் செய்த ஏக்கங்கள் நீங்கும். நீங்கள் இருவரும் உங்கள் மொபைல் போனிலேயே உங்கள் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க முடியும். சரி வாங்க தூரத்தில் இருக்கும் உங்க அம்மாவுக்காக உங்கள் அன்னையர் தின ஸ்பெஷல் ஐடியாக்கள் என்னென்ன என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ஆன்லைன் ரெஸ்டாரண்ட்
இதற்கு உங்கள் இருவர் வீட்டிலும் வெறும் மொபைல் போன் அல்லது லேப்டாப் இருந்தால் போதுமானது. உங்க அம்மாவுக்கு பிடித்த உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொடுக்கலாம். பிறகு இருவரும் இணைந்து வீடியோ கால் மூலம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிடலாம்.
அன்னையர் தினம் அன்றைக்கு இப்படி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும். இது அருகில் இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் ஏற்படுத்துகிறது. எனவே இந்த அன்னையர் தினத்துக்கு வெர்ஜூவல் ரெஸ்டாரண்ட்டை உருவாக்குங்கள்.
வெர்ஜூவல் மூவி நைட்
தற்போது உங்கள் இருவருக்கும் விருப்பமான ஆயிரக்கணக்கான படங்கள் ஸ்ட்ரீமிங் சேவைகளில் வருகிறது. இது ஒரு தியேட்டர் உணர்வை எப்பொழுதும் உங்களுக்கு கொடுக்கும். இதில் உங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு படத்தை தேர்ந்தெடுத்து இருவரும் ஒன்றாக இணைந்து பார்க்கலாம்.
வீடியோ கால் மூலம் உங்கள் கருத்துகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியும். படம் பார்க்கும் போது இருவரும் ஒன்றாக அமர்ந்து சிரிக்க முடியும், இருவரும் ஒன்றாக இணைந்து பேச முடியும். உங்கள் அம்மா உங்கள் அருகில் இருப்பது போன்ற உணர்வை நீங்கள் பெறலாம்.
ஆன்லைனில் பயணம் செல்லுங்கள்
உங்கள் அம்மாவுக்கு எதாவது விருப்பமான இடங்கள் இருக்கும். அவர்கள் போக முடியாத சூழல் இருக்கலாம். இந்த அன்னையர் தினத்தில் அவர்களுக்கு பிடித்த இடங்களை நீங்கள் பரிசளிக்கலாம். அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு ஒரு வெர்ஜூவல் பயணத்தை கூட்டிச் செல்லலாம்.
கையில் டீ, காபி எடுத்துக் கொண்டு இருவரும் இந்த பயணத்தை ஒன்றாக பார்த்து ரசிக்கலாம். ஆன்லைனில் பயணம் மேற்கொள்வது கண்களுக்கு எப்பொழுதுமே விருந்தளிக்க கூடியது. எனவே இந்த அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவை அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள்.
சந்தோஷமான நேரங்கள்
உங்கள் அம்மாவுடன் இணைந்து ஒரு நைட் பார்ட்டியை நீங்கள் உருவாக்கலாம். அன்னையர் தினத்துக்கு சில நாட்களுக்கு முன்னரே நைட் பார்ட்டிக்கு தேவையான ஆடம்பரமான ஒயின் கிளாஸ்கள், டீ கப், அன்னையர் தின கார்டுகளை நீங்கள் பரிசளிக்கலாம்.
அன்னையர் தினத்தன்று வீடியோ கால் மூலம் ஒன்றாக அமர்ந்து ஆரஞ்சு ஜூஸ், டீ அல்லது காபி போன்ற பானங்களை ஷியர் செய்து கொண்டே குடிக்கலாம். மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்தை தேர்வு செய்து இந்த பார்ட்டியை நீங்கள் சந்தோஷமாக கொண்டாடுங்கள். உங்கள் அம்மாவிடம் வேடிக்கையாக பேசி நேரத்தை செலவிடுங்கள்.
புத்தக கிளப்பை தொடங்குங்கள்
உங்கள் அம்மாவுக்கு புத்தக வாசிப்பு மிகவும் பிடிக்கும் என்றால் ஒரு புத்தக கிளப்பை நீங்கள் உருவாக்கலாம். நீங்கள் இருவரும் பேசக் கூடிய உரையாடலை மையப்படுத்தி புத்தகத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு புத்தகத்தை வீடியோ கால் வழியாக படிக்கலாம் அல்லது உங்கள் அம்மாவின் புத்தகக் கதைகளை நீங்கள் கேட்டு மகிழலாம்.
இருவரும் புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம். தற்போது ஆடியோ புக் கதைகள் கூட கிடைக்கின்றன. உங்கள் லேப்டாப்பில் ஆடியோ புக் கதைகளை இயக்கி நீங்களும் உங்கள் அம்மாவும் ஒன்றாக கேட்கலாமே.
வெர்ஜூவல் சமையல் வகுப்பை தொடங்குங்கள்
இந்த அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவுடன் இணைந்து சமையல் பண்ண நினைத்தால் ஆன்லைன் வழியாக இருவரும் ஒன்றாக இணைந்து சமைக்கலாம். உங்கள் மதிய வேளைக்கான உணவை இருவரும் வீடியோ கால் வழியாக சமைத்து மகிழலாம்.
இதன் மூலம் உங்கள் அம்மாவின் சமையல் டிப்ஸ்களை கேட்டு நீங்கள் சமைக்க முடியும். இதன் மூலம் உங்கள் அம்மா தூரத்தில் இருந்தாலும் உங்கள் வீட்டு கிச்சனில் இருந்து சமைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
வெர்ஜூவல் போர்டு கேம்
இப்பொழுதுள்ள டெக்னாலஜியில் நிறைய வெர்ஜூவல் போர்டு கேம்கள் உள்ளன. Ludo, chess போன்ற நிறைய வெர்ஜூவல் போர்டு கேம்கள் இருக்கிறது. இதன் மூலம் நீங்களும் உங்கள் அம்மாவும் ஆன்லைன் வழியாக இந்த கேம்களை விளையாடலாம். ஒருவருக்கொருவர் சந்தோஷமாக விளையாடவும் அதில் வெற்றி பெறவும் இந்த ஆன்லைன் கேம்கள் உங்களுக்கு உதவுகிறது.
ஆன்லைன் வகுப்புகள்
உங்கள் அம்மாவுக்கு பிடித்த ஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்யலாம். ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்கள் செய்தல், நடனம் ஆடுதல், யோகா பயிற்சி போன்ற ஆன்லைன் வகுப்புகளை உங்கள் அம்மாவுடன் இணைந்து நீங்களும் செய்யலாம். இருவரும் ஒன்றாக சேர்ந்து கற்றுக் கொள்ளும் போது உங்கள் அம்மா மிகுந்த மகிழ்ச்சியை அடைவார்கள்.



Click it and Unblock the Notifications