Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப தற்பெருமை கொண்டவர்களாம்... யாரையும் மதிக்கமாட்டாங்களாம்... உங்க ராசி என்ன?
சிலருக்கு மற்றவர்களுக்கு முன் புத்திசாலித்தனமாக செயல்படும் போக்கு இருக்கும். சிலர் வேண்டுமென்றே இதனை செய்கிறார்கள், சிலர் தங்களுக்கேத் தெரியாமல் ஆழ்மனதில் செய்கிறார்கள். மேலும் இந்த செயல்பாட்டில், அவர்கள் மற்றவர்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக மாறலாம்.
கூடுதல் புத்திசாலித்தனமாகவும் மற்றவர்களை விட உயர்ந்தவராகவும் செயல்படுவது பெரும்பாலான மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் ஒரு பண்பு. இப்படிப்பட்டவர்களுடன் எப்போதும் இருப்பதற்கு யாரும் விரும்புவதில்லை.

எனவே இதுபோன்ற நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க, மற்றவர்களிடம் கூடுதல் புத்திசாலித்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்ளும் ராசிக்காரர்களை அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். அவர்கள் கவலைப்படுவது அவர்கள் உலகிற்கு தங்களை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பற்றி மட்டும்தான்.
எப்போதும் எல்லாவற்றிலும் தங்களை உயர்ந்தவர்களாகவும், அறிவாளியாகவும் காட்டிக் கொள்ள அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களின் மேன்மை சில சூழ்நிலைகளில் பலனளிக்கும், ஆனால் பல நேரங்களில் அவர்களை வெறுக்க வைக்கும்.
தனுசு
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு உண்மையில் நேரம் இல்லை. தனுசு ராசிக்காரர்கள் தங்கள் நேரத்தையும் சக்தியையும் கல்விரீதியாகவும், தொழில்ரீதியாகவும் தங்களைப் பற்றிய சிறந்தவர்களாக மாற்றிக்கொள்ள பயன்படுத்துவார்கள்.
வாழ்க்கையை நோக்கிய அவர்களின் ஆற்றல் அவர்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டலாம். அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாதபோது அவர்கள் மற்றவர்களின் முன் வெறுப்புக்குரியவராக தோன்றலாம்.
கும்பம்
அவர்கள் முழு உலகத்திற்கும் தங்கள் திறன்களைக் காட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் ஆழ்மனதில் முரட்டுத்தனமாகி, மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள். அவர்கள் யாருடைய முன்னிலையிலும் பலவீனமானவர்களாக இருக்க முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள், அதனால் அவர்கள் தங்களைச் சுற்றி ஒரு வலுவான சுவரை கட்டியமைக்கிறார்கள்.
ரிஷபம்
இவர்கள் உண்மையில் தங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து அறிவதில்லை, ஆனால் அவர்கள் சில நேரங்களில் மக்கள் முன் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள். அனைத்திற்கும் அவர்களின் பயம்தான் காரணம்.
எல்லோரும் வெற்றிபெறும் வேளையில் தாங்கள் வெற்றிக்காக தத்தளிப்பதாக நினைத்து அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்
அவர்கள் அனைவருக்கும் மேலாக இருக்க வேண்டுமென்று செயல்படுகிறார்கள், அதே நேரத்தில் அவர்களின் தனித்துவமான, நேரடியான மற்றும் அற்புதமான ஆளுமைகளுக்காக மக்கள் தங்களைப் போற்றுகிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் இங்கே மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள், ஏனென்றால் பெரும்பாலான மக்கள் தங்களைத் தாங்களே உயர்ந்தவர்களாக நினைபவர்களுடன் இருப்பதை விரும்புவதில்லை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











