Latest Updates
-
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா?
2024இல் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப நம்பிக்கையானவர்களா இருப்பாங்களாம்... உங்க ராசி என்ன?
வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசி அறிகுறிகளும் ஒவ்வொரு ஆளுமை பண்புகளை கொண்டிருக்கின்றனர். ஆளுமை பண்பின் அடிப்படையில், உங்களின் நடத்தைகள் மற்றும் குணநலன்கள் இருக்கும்.
புத்தாண்டு 2024 தொடங்கிவிட்டதால், மக்கள் எல்லாரும் பல எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறார்கள். இந்த வருடம், தாங்கள் நினைத்த விஷயங்கள் வெற்றி பெறுமா? தங்களது ராசிக்கு என்ன அதிர்ஷ்டம் உள்ளது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான மிகவும் நம்பகமான 4 சிறந்த ராசி அறிகுறிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவு மற்றும் நுண்ணறிவுகளை நீங்கள் தேடுகிறீர்களானால், எந்த ராசிக்காரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படிக்கவும். உறவில் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை இரண்டும் முக்கியம்.
ரிஷபம்
ஏப்ரல் 20 மற்றும் மே 20க்கு இடையில் பிறந்த ரிஷப ராசி நேயர்கள், அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் வாழ்க்கைக்கான நடைமுறை அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள். 2024 ஆம் ஆண்டில், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையான ஆற்றல் இவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.
இது ஒரு வருடத்திற்கான நிலைத்தன்மை மற்றும் உறுதியான முன்னேற்றத்தை உறுதியளிக்கிறது. நீங்கள் ரிஷப ராசிக்காரர் என்றால், பிரபஞ்ச ஆற்றலைத் தழுவி, இந்த ஆண்டை நம்பிக்கையுடன் நடத்துங்கள்.
கன்னி ராசி
இந்த பட்டியலில் அடுத்தது ஆகஸ்ட் 23 மற்றும் செப்டம்பர் 22 க்கு இடையில் பிறந்த கன்னி ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டில், கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒழுங்கையும் கட்டமைப்பையும் கொண்டு வர நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால், அவர்களின் உள்ளார்ந்த நம்பகத்தன்மை பிரகாசிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கன்னி ராசி நேயர்களே, உங்கள் உன்னிப்பான இயல்பைத் தழுவுங்கள். ஏனெனில் இது ஆண்டு முழுவதும் வெற்றி மற்றும் நம்பகத்தன்மைக்கு உங்களுக்கு திறவுகோலாக இருக்கும்.
மகரம்
டிசம்பர் 22 மற்றும் ஜனவரி 19-க்கு இடையில் பிறந்த மகர ராசிக்காரர்கள், அவர்களின் லட்சியம் மற்றும் நடைமுறைக்கு பெயர் பெற்றவர்கள். 2024 ஆம் ஆண்டில், நம்பிக்கையான சக்திகள் நம்பகத்தன்மையின் புதிய உயரங்களுக்கு மகர ராசியை உயர்த்துகின்றன.
உங்கள் லட்சிய இயல்பைத் தழுவுங்கள், மகர ராசி, நட்சத்திரங்கள் உங்களை சாதனைகள் மற்றும் நம்பகத்தன்மையின் ஒரு வருடத்தை நோக்கி வழிநடத்தட்டும்.
கடகம்
ஜூன் 21 மற்றும் ஜூலை 22 க்கு இடையில் பிறந்த கடக ராசி நேயர்கள் வளர்ப்பு மற்றும் உள்ளுணர்வு பண்புகளை கொண்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் நம்பகத்தன்மையை அவர்களின் உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் வளர்ப்பு உள்ளுணர்வுகளில் ஆழமாக வேரூன்றி இருப்பதைக் காணலாம்.
நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் ஆற்றல்கள் உங்கள் அக்கறையான தன்மையை, கடக ராசி நேயர்கள் மேம்படுத்தி, இரக்கத்துடனும் நம்பகத்தன்மையுடனும் இந்த ஆண்டை வழிநடத்தட்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

