Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த 4 ராசிக்காரங்க மனசு முழுக்க நெகட்டிவ் எண்ணங்களா நிறைஞ்சிருக்குமாம்... இவங்ககூட இருக்கிறது ரொம்ப கஷ்டம்!
ஜோதிட சாஸ்திரத்தில், நமது இராசி அறிகுறிகள் நமது சிந்தனை முறைகள் மற்றும் உணர்ச்சிப் போக்குகள் உட்பட, நமது ஆளுமைகளின் பல்வேறு அம்சங்களை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த பதிவில் தங்களின் எதிர்மறையான எண்ணங்களால் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்போதும் இருளில் வாழ்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனமே அவர்களின் எதிர்மறை எண்ணங்கள்தான். அதனை மாறாத வரை அவர்களின் வாழ்க்கையில் எந்த நல்ல விஷயமும் நடக்காது.

மிதுனம்
இரட்டையர்களின் அடையாளமான மிதுன ராசிக்காரர்கள், எதிர்மறையான சிந்தனைக்காக அவர்களின் நண்பர்களிடையே மிகவும் பிரபலமானவர்களாக இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் பல கோணங்களில் சூழ்நிலைகளை அதிகமாகச் சிந்தித்து பகுப்பாய்வு செய்கின்றனர், இது உறுதியற்ற தன்மை மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.
அவர்களின் மனம் தொடர்ந்து எப்போதும் பதட்டமாக இருக்கும், மேலும் அவர்கள் கடந்த கால தவறுகளிலேயே தேங்கியிருக்கலாம் அல்லது எதிர்காலத்தை நினைத்து எப்போதும் பயப்படுவார்கள். இந்த போக்கு அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் எதிர்மறை சுழற்சியை ஏற்படுத்தும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அவர்களின் உணர்ச்சி ஆழம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றால் அறியப்படுகிறது, இது எதிர்மறையான சிந்தனைக்கு ஆளாகக்கூடிய மற்றொரு இராசி அறிகுறியாகும். அவர்கள் மிகவும் பச்சாதாபம் கொண்டவர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகளை உள்வாங்கி, அவர்களின் பிரச்சினைகளுக்காகவும் கவலைப்படுவார்கள்.
நிராகரிப்பு குறித்த அவர்களின் பயம் மற்றும் அவநம்பிக்கையான எண்ணங்கள் மற்றும் சுய சந்தேகத்திற்கு வழிவகுக்கும். எதிர்மறையை எண்ணங்களை எதிர்த்து போராட, கடக ராசிக்காரர்கள் உணர்ச்சிரீதியான பின்னடைவை தவிர்ப்பதாலும், ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் கவனமாகவும், பகுப்பாய்வுடனும் இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள், மேலும் முடிவுகள் அவர் எதிர்பார்த்த விதத்தில் செல்லவில்லை என்றால், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை சூழ்ந்து கொள்ளலாம்.
கன்னி ராசியினர் குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளவும், எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் லட்சிய மற்றும் உறுதியான நபர்கள், அவர்கள் எப்போதும் வெற்றி மற்றும் சாதனைக்காக பாடுபடுகிறார்கள். இருப்பினும், அவர்களின் சுயவிமர்சன இயல்பு அவர்கள் தங்கள் இலக்குகளை அடையவில்லை அல்லது போதுமான முன்னேற்றம் அடையவில்லை என நினைக்கும் போது எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வழிவகுக்கும். அவர்கள் தங்கள் சாதனைகளைக் கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
