460 கோடி மதிப்புள்ள உலகின் மிகவும் விலையுயர்ந்த இந்த வாட்ச் யாரிடம் உள்ளது தெரியுமா? இதில் அப்படி என்ன ஸ்பெஷல்

கடிகாரங்கள் காலம் காலமாக மக்களுக்கு காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், நேரத்தை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடிகாரங்கள் மிக சொற்ப விலை முதல் கனவில் கூட நினைத்துக் கூட பார்க்க முடியாத தொகை வரை விற்கப்படுகிறது.

ஆடம்பரக் கடிகாரங்கள் செல்வத்தின் அடையாளமாக இருக்கிறது. இந்த ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு செல்வந்தர்கள் பெருமளவு செலவு செய்கிறார்கள். இந்த கடிகாரங்கள் வெறும் நேரத்தை காட்டுவதை விட அதிக சேவைகளை வழங்குகிறது. இந்த ஆடம்பர கடிகாரங்கள் அணிபவர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் கவனமாக துல்லியமாக தயாரிக்கப்படுகின்றன.

Most Expensive Watch in the World That Costs Rs 460 Crore

கடந்த காலங்களை விட தற்போது மக்கள் கடிகாரங்களுக்கு அதிகளவில் பணத்தை செலவழிக்கிறார்கள். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, கொரோனா தொற்றுக்காலம் இந்த கடிகாரங்களின் விலையை திடீரென அதிகரித்தது. ஏனெனில் தேவைக்கும், வழங்கலுக்கும் இடையிலான இடைவெளி அதிவேகமாக அதிகரித்தது.

உலகின் மிகவும் விலையுயர்ந்த கடிகாரம் எது?

2014 இல், கிராஃப் டயமண்ட்ஸ் என்ற லண்டனைச் சேர்ந்த பிராண்ட், Baselworld இல் கிராஃப் ஹாலுசினேஷனை(Graff Hallucination) உலகிற்கு வெளிப்படுத்தியது. இதிலுள்ள ஒவ்வொரு வைரத்திற்கும் அவற்றின் கதை உள்ளது. கிராஃப் டயமண்ட்ஸ் இந்த கடிகாரத்தை நிறுவனத்தின் அதிகாரம், திறன், புதுமை மற்றும் சிறந்து விளங்குதல் ஆகியவற்றின் அடையாளமாக உருவாக்கியது. 30 பேர் கொண்ட குழு நான்கரை வருடங்கள் எடுத்துக்கொண்டு இந்த அதிசய கடிகாரத்தை உருவாக்கியது.

Graff Hallucinations கடிகாரத்தின் மதிப்பு என்ன?

பூமியில் கிடைத்த அரிய வைரங்களால் செய்யப்பட்ட இந்த கடிகாரத்தின் மதிப்பு $55 மில்லியன் (INR 460 கோடி) ஆகும். கடிகாரத்தில் மொத்தம் 110 காரட் பெரிய வண்ண வைரங்கள் கண்ணுக்கு தெரியாத பிளாட்டினம் அமைப்பில் வளைய வடிவில் வரிசையாக உள்ளன. நிறங்கள் ஃபேன்ஸி விவிட் மஞ்சள் முதல் அடர் நீலம் வரை உள்ளன.

கடிகாரத்தின் மையத்தில் உள்ள வைரங்களுக்கு நடுவே சிறிய இளஞ்சிவப்பு வைரங்களால் வடிவமைக்கப்பட்ட குவார்ட்ஸ் டயல் உள்ளது. லாரன்ஸ் தென்னாப்பிரிக்க டயமண்ட் கார்ப்பரேஷனின் (SAFDICO) முன்னணி பங்குதாரராக இருப்பதால், இந்த கடிகாரத்தில் உள்ள வைரங்கள் மிகவும் அரிதானவை மற்றும் நேர்த்தியானவை. SAFDICO தென்னாப்பிரிக்காவின் முக்கிய வைர உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். கிராஃப் தனது கைக்கடிகாரங்களுக்கு சிறந்ததை மட்டுமே தேர்ந்தெடுக்கிறது, இது அழகான கடிகாரங்களின் மதிப்பை அதிகரிக்கிறது.

இந்த கடிகாரத்தை உருவாக்கியவர் யார்?

கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான லாரன்ஸ் கிராஃப் அவர்களின் யோசனையாகும். திரு கிராஃப் லண்டனில் பிறந்தவர், அவர் தனது வாழ்க்கையை நகைக் கடையில் பயிற்சியுடன் தொடங்கினார், ஆனால் அவருக்குள் இருந்த படைப்பாளிக்கு இதில் திருப்தி ஏற்படவில்லை. விரைவில் அவர் தனது தனித்துவமான நகைகளை உருவாக்கத் தொடங்கினார், மேலும் 24 வயதிற்குள் திரு கிராஃப் லண்டனில் இரண்டு நகைக் கடைகளின் உரிமையாளராக இருந்தார்.

அவரது வணிகம் அதன்பின் பலபடி உயர்ந்தது, விரைவில் அவர் பிரிட்டனில் மிகப்பெரிய நகை உற்பத்தித் தொழிலைத் தொடங்கினார். இன்று, திரு கிராஃப் ஹாங்காங், லண்டன், நியூயார்க், ஜெனிவா, ஹாங்காங் மற்றும் டோக்கியோ உட்பட உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட முதன்மைக் கடைகளைக் கொண்டுள்ளது. அனைவராலும் விரும்பப்படும் தனித்துவமான கடிகாரங்களுக்கு இந்த நிறுவனம் நன்கு அறியப்பட்டதாகும். அவர்களின் கடிகாரத்தை அணிந்தவர்களில் இளவரசி டயானா, மேகன் மார்க்லே மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் அடங்குவர்.

Graff Hallucinations ஒரு கடிகாரம் என்பதை விட அதிகம். இது அந்த நிறுவனத்தின் அதிகாரம், திறன், புதுமை மற்றும் சிறப்பின் சின்னமாக இருக்கிறது. அதனால்தான் இதை கடிகாரத்தை இந்த நிறுவனமே வைத்துள்ளது.

Story first published: Friday, August 2, 2024, 11:26 [IST]
Desktop Bottom Promotion