Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
30000 முதல் 15 லட்சம் வரை விற்கப்படும் உலகின் காஸ்டலியான காளான்கள்... அப்படி என்ன இருக்கு இதுல?
காளான் சைவ உணவு உண்பவர்ளிடையே மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும், இது வைட்டமின் டி நிறைந்ததாக அறியப்படுகிறது. இந்த காய்கறியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது மட்டுமல்ல, சுவையும் நிறைந்ததாக இருக்கிறது.
இந்த காய்கறியின் சுவையை விரும்பாத சிலர் உள்ளனர், ஆனால் காளான்கள் புரதம், வைட்டமின்கள் மற்றும் பல தாதுக்களின் வளமான மூலமாகும் என்பது அவர்களுக்குத் தெரியாது. பொதுவாக காளான் ஒரு பாக்கெட்டின் விலை நூறு ரூபாய்க்குள் இருக்கும்.

ஆனால் சாமானியர்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத விலையில் விற்கும் சில காளான் வகைகள் உள்ளன. இந்த காளான் வகைகளில் சில சுவை மொட்டுக்களைத் தூண்டுகின்றன, ஆனால் அவற்றின் விலை நமக்கு ஹார்ட் அட்டாக்கையே வரவைத்து விடும். சாமானிய மக்களால் வாங்க முடியாத மிக அதிக விலை கொண்ட காளான்கள் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
குச்சி காளான்
இந்தியாவில், இந்த அரிய வகை காளான் வகை ஹிமாச்சல், உத்தராஞ்சல் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மலைப்பகுதிகளில் வளரும். குச்சி காளான் பயிரிட முடியாது, அது தானாக வளர்ந்து மார்ச் மற்றும் மே மாதங்களில் சேகரிக்கப்பட்டு பின்னர் உலர்த்தப்படுகிறது. உலர்த்திய பின், சந்தையில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ குச்சி காளானுக்கு, 30,000 ரூபாய் வரை விலை கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.
யார்ட்சா குன்பு
இந்த காளான் ஆங்கிலத்தில் Caterpillar Fungus என்று அழைக்கப்படுகிறது, மேலும் ஆசியாவில் அதன் திபெத்திய பெயரான Yartsa Gunbu என்ற பெயரால் இது அழைக்கப்படுகிறது. Yartsa gunbu நேபாளம், இந்தியா, திபெத் மற்றும் பூட்டான் பகுதியில் 3000 முதல் 5000 மீட்டர் உயரத்தில் இமயமலை சிகரங்களில் வளர்கிறது. நீங்கள் ஒரு கிலோ Yartsa Gunbu வாங்க விரும்பினால்,15 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்.
ஐரோப்பிய வெள்ளை ட்ரஃபிள்
இது ஓக் மரத்தின் வேர்களில் வளரும், இது ஐரோப்பியர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க பயிராக விளங்குகிறது. இதனை யாராலும் பயிரிட்டு வளர்க்க முடியாது. இது மரத்தின் வேர்களில் வளர்கிறது, அதன் சாகுபடியில் நீங்கள் எந்த வகையான நுட்பங்களையும் பயன்படுத்த முடியாது. விளைச்சல் பற்றாக்குறையால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒரு கிலோ வெள்ளை ட்ரஃபிள் வாங்க, 4,50,00 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது.
மாட்சுடேக் காளான்
ஜப்பானில் கியோட்டோ அருகே உள்ள தம்பா பகுதியில்மட்டுமே இந்த காளான் வளரும். இந்த காளான் மிகவும் மதிப்புமிக்கது, ஒரு கிலோ மட்சுடேக் காளான் விலை 75000 முதல் 1.5 லட்சம் வரை இருக்கும். இந்த காளான் பொதுச் சந்தையில் எளிதில் கிடைப்பதில்லை. இந்த காளான் சாப்பிட நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
மோரல் காளான்
இந்த காளானை சாகுபடி செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. இது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அடர்ந்த காடுகளில் வளர்கிறது. ஒரு கிலோ மோரல் காளான் விலை 36000 லிருந்து 50000 வரை விறக்கப்படுகிறது.
சாண்டரெல் காளான்
உலகின் மிகவும் பிரபலமான காளான்களில் ஒன்றான சாண்டரெல்ஸ் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வளரும். அவர்கள் தோற்றத்தில் ஒரு சிப்பி காளானை ஒத்திருக்கிறார்கள். இவை பொதுவாக வெள்ளை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் காணப்படும். ஒரு கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எனோகி காளான்
எனோகி காளான் வெல்வெட் ஷாங்க் என்றும் அறியப்படுகிறது மற்றும் ஜப்பானிய உணவு வகைகளில் இது பிரபலமான ஒரு உணவாகும். அவை நீண்ட மெல்லிய வெள்ளை காளான், பொதுவாக அவை கீரை போல கொத்தாக விற்கப்படுகின்றன. அவை ஏனோகிடேக், கோல்டன் ஊசி அல்லது லில்லி காளான்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.2,000.



Click it and Unblock the Notifications
