இந்த 5 ராசி பெண்களுக்கு இரக்கம் என்பதே இருக்காதாம்... இவங்ககிட்ட இருந்து பத்தடி தள்ளியே இருங்க...!

ஒவ்வொரு ராசிக்கும் சில நல்ல குணங்கள் மற்றும் தீய குணங்கள் இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்களிடம் தீய குணங்கள் அதிகமிருக்கும். ஜோதிட சாஸ்திரம் அப்படி ஆபத்தான தீய குணங்கள் கொண்ட ராசிகள் என்னென்ன என்பதை அறிய உதவும். இதன்மூலம் நாம் விழிப்புணர்வுடன் இருப்பதுடன், அவர்களின் எதிர்மறை குணங்களை கையாளுவதற்கும் உதவும்.

பெண்கள் இயல்பாகவே மென்மையாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள், ஆனால் பொறாமை மற்றும் கோபம் கொண்டால், அவர்கள் கொடூரமானவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த பெண்கள் மிகவும் சுயநலவாதிகள் மற்றும் தீயவர்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

Most Cruel Women Zodiac Signs in Tamil

விருச்சிகம்
கொடூரமான ராசிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது விருச்சிகம். இது அனைத்து ராசிகளிலும் மிகவும் தீவிரமானது மற்றும் உணர்ச்சிவசமானது. அவர்களின் தீவிரம் பெரும்பாலான சமயங்களில் தவறான திசையில் திரும்பலாம் மற்றும் அடிக்கடி வெறுப்பு மற்றும் சிடுமூஞ்சித்தனமாக மாறும்.

அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கலாம் மற்றும் அவர்கள் தங்கள் விரும்பியதைப் பெறவில்லை என்றால் வெளிப்படையாகவே இரக்கமில்லவர்களாகவும், கொடூரமானவராகவும் மாறலாம். மன்னிக்கும் அல்லது மறக்கும் குணம் இவர்களிடம் அறவே கிடையாது.

இந்த ராசி பெண்கள் எப்போதும் எதிரியை பழிவாங்க விரும்புகிறார்கள். அவர்கள் கோபமாக இருக்கும்போது மிகவும் கொடூரமான ராசி அறிகுறிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் வெறுப்பும் அன்பும் இந்த உலகில் தனித்துவமானது.

கடகம்
இரக்கமே இல்லாத பெண் ராசிகளில் கடக ராசிக்காரர்களும் ஒருவர். கடக ராசி பெண்களின் உணர்வுகள் தேவைக்கு அதிகமாகவே செயல்படுகின்றன. அவர்கள் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தாலோ அல்லது தங்களுக்கு நெருக்கமான ஒன்றை இழக்க நேரிடும் என்ற அச்சம் ஏற்பட்டாலோ அவர்கள் வெளிப்படையாக மிகவும் பொஸசிவாக மாறலாம் மற்றும் அழிவை ஏற்படுத்தலாம்.

அவர்கள் இவ்வாறு உணரும்போது, அவர்கள் மிகவும் மோசமானவர்களாகவும், இரக்கமில்லாதவர்களாகவும் மாறிவிடுவார்கள், மேலும் தங்கள் செயல்பாடுகளை நினைத்து பின்னாளில் வருந்துவார்கள். ஆனால் அதற்குள் அவர்கள் பல உறவுகளை இழந்திருப்பார்கள்.

மகரம்
மகர ராசி பெண்களும் மோசமான இருண்ட பக்கத்தைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் இந்த குணத்தை வெளிப்படுத்தும் போது அவர்கள் எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்க மாட்டார்கள். தங்கள் எதிரிகளை பழிவாங்க அல்லது போட்டியாக இருப்பவர்களை தோற்கடிக்க அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள், அதில் அவர்களுக்கு எந்த அவமானமும் இருக்காது. அவர்களுக்கு இரக்கமில்லை ஒருவரின் துன்பத்தில் உதவுவதற்குப் பதிலாக அவர்களின் துன்பத்தைப் பார்த்து இவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் கோபமாகவோ அல்லது வருத்தமாகவோ இருக்கும்போது அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாகவும், வார்த்தைகளால் துன்புறுத்துபவர்களாகவும் மாறலாம். அவர்கள் மிகவும் போட்டி மனப்பான்மை உடையவர்கள் மற்றும் தோல்விகள் அவர்களுக்கு ஆறாத காயத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே நீங்கள் அவர்களின் இலக்கின் வழியில் வந்தால், அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு மோசமானவர்களாக மாறுவார்கள்.

அவர்கள் வெற்றி பெற்றவுடன் தங்கள் எதிரிகளை அளவிற்கு அதிகமாக துன்புறுத்துவார்கள், அதேசமயம் வெற்றியை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். ஆனால் அவர்கள் அப்படி கொண்டாடும் போது எதிரிகளுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் எப்போதும் ஸ்பாட்லைட்டை விரும்புகிறார்கள். அவர்கள் மிகவும் வசீகரமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள், யாராலும் அவர்களைக் காதலிக்காமல் இருக்க முடியாது. ஆனால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தாலோ அல்லது நீங்கள் அவர்களின் கவனத்தை திருடினாலோ, அவர்கள் உங்களை துண்டாடலாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இராஜதந்திரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் சரியாக இருக்க வேண்டும் என்பது தெரியும். தங்கள் எதிரிகளை பலவீனப்படுத்தும் அல்லது காயப்படுத்தும் விஷயம் எதுவென்று அவர்கள் நன்கு அறிவார்கள்.

Story first published: Wednesday, May 24, 2023, 11:59 [IST]
Desktop Bottom Promotion