Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க எப்பவும் கஷ்டப்பட்டுத்தான் இருக்கணுமாம்... உங்க துணை ராசி என்ன?
அன்பு நிறைந்த உறவுகளே மனித வாழ்க்கையின் நல்வாழ்விற்கும், வலிமைக்கும் காரணமாகும். மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். காதல் உறவுகள் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாலும் அதற்கென சில தனிப்பட்ட குறைகள் இருக்கத்தான் செய்யும். உங்கள் காதல் வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது உங்களை மட்டும் சார்ந்திலை உங்களை துணையையும் சார்ந்துதான் இருக்கிறது.
ஒவ்வொரு வகையான உறவுக்கும் அதன் சொந்த சவால்கள் இருப்பதால், அவற்றைச் சமாளிக்க கற்றுக்கொள்வது ஒரு உறவை வெற்றிகரமானதாக மாற்றும். நீங்கள் மற்றவர்களுடன் எப்படி பழகுகிறீர்கள் என்பது உங்கள் ராசியைப் பொறுத்தது. ஒவ்வொரு ராசிக்கும் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் வழி உண்டு.

சில ராசிக்காரர்கள் தங்கள் உறவில் எளிதில் கோபமும், எரிச்சலும் அடைவார்கள். இதனை சமாளிப்பது அவர்களின் துணைக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் தாங்களும் எரிச்சலடைந்து தங்கள் துணையையும் எரிச்சலாக்குவார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஆதிக்கத்தின் அடையாளம் மற்றும் அவர்களின் மேலாதிக்க இயல்பு அவர்களின் கோபத்தைத் தூண்டும். விஷயங்கள் அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை என்றால், அவர்கள் உண்மையில் எரிச்சலடையலாம். இந்த பழக்கம் உறவுகளில் மிகப்பெரிய பிரச்சனையாக மாறும். நீங்கள் அவர்களுடன் பேச்சுக்கு கட்டுப்படவில்லை என்றால், அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக மாறலாம். ஒருமுறை அவர்கள் கோபமடைந்தால், அவர்கள் நார்மல் நிலைக்குத் திரும்ப பல மணி நேரம் ஆகலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். ஆனால் கன்னி ராசிக்காரர்கள் ஒருவரை சகித்துக்கொள்ளும் விஷயத்தில் மிகவும் பொறுமை குறைவாக இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட தங்கள் துணையை விமர்சிக்கிறார்கள் மற்றும் அனைத்து விஷயத்திலும் அவர்களைக் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளனர். கன்னி ராசியினருடன் மகிழ்ச்சியாக இருக்க, அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது மிகவும் முக்கியமானது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் முடிவுகளைப் பற்றி கேள்வி கேட்பது அவர்களின் கோபத்தை எளிதில் தூண்டிவிடும். ஒரு உறவைப் பொறுத்தவரை, விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் துணையின் கருத்துக்களை அரிதாகவே கேட்கிறார்கள் மற்றும் மதிக்கிறார்கள். தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அனைவரையும் மாற்றும் பிடிவாதமான குணம் அவர்களிடம் உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு பொய் சொன்னாலும் கோபம் வரலாம். எனவே ஆரோக்கியமான உறவைப் பேணுவதற்கு அவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மோசமான நகைச்சுவை உணர்வைக் கொண்டவர்களாக இருப்பார்கள், எனவே அவர்கள் மிகவும் சீரியஸான காதலர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் சோம்பேறிகள் மற்றும் சீரியஸாக இல்லாதவர்களை எரிச்சலூட்டும் நபர்களாகப் பார்க்கிறார்கள். அவர்களின் துணை அவர்களின் குணத்திற்கும், மனநிலைக்கும் ஏற்றவாறு நடக்க வேண்டும். எரிச்சலாக இருக்கும் போது அவர்கள் தங்கள் துணையை பொது இடத்தில் அவமானப்படுத்துவதற்கு எப்போதும் யோசிக்க மாட்டார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மிகவும் இராஜதந்திர குணம் கொண்டவர்கள். அவர்கள் விரும்பத்தகாத ஒன்றை தங்கள் துணை செய்வதைப் பார்த்தால், அவர்கள் தங்கள் துணையுடன் தொடர்புகொள்வதை புறக்கணிக்கிறார்கள் அல்லது நிறுத்துகிறார்கள். அவர்களின் நடத்தை பெரும்பாலும் அவர்களின் துணையை உறவில் முக்கியமில்லாதவர்களாகவும், விரும்பத்தகாதவர்களாகவும் உணர வழிவகுக்கும். அவர்கள் பதட்டமான சூழ்நிலைகளில் அமைதியற்றவர்களாக இருக்கலாம். அவர்கள் தங்கள் கோபத்தை மறைக்க முடியும் ஆனால் விரக்தியை மறைக்க முடியாது.



Click it and Unblock the Notifications












