Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
சிம்ம ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட போகுது...
Moon Venus Mars Conjunction In Leo 2023: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்து பயணிக்கக்கூடும். அப்படி கிரகங்கள் இணையும் போது, அது சில யோகங்களை உருவாக்கும்.
அந்த வகையில் ஆடம்பரம், காதல், அழகு, செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன், சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் கிரகங்களின் தளபதியும், தைரியம் மற்றும் வீரத்தின் காரணியாக கருதப்படும் செவ்வாயும் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சந்திரனும் சிம்ம ராசியில் நுழைந்துள்ளார். இதனால் சிம்ம ராசியில் சந்திரன், செவ்வாய், சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இது ஒரு சுப யோகம் மற்றும் இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, திடீர் பணவரவும் கிடைக்கும். இதனால் நிதி நிலை வலுவடையும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். அதோடு பதவி உயர்வு கிடைத்து புதிய பொறுப்புக்களைப் பெறக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். மேலும் இக்காலத்தில் நிலம், வீடு வாங்கவும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் திடீரென்று நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications