Latest Updates
-
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..!
சந்திர பெயர்ச்சியால் உருவான இந்திர யோகம்: அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Moon Transit In Scorpio: ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றம் அவ்வப்போது நிகழும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும்.
அந்த வகையில் நவகிரகங்களில் சந்திரன் குளிர்ச்சியானவர். கிரகங்களிலேயே சந்திரன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். அதுவும் இவர் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

இந்த சந்திரன் ஆகஸ்ட் 24 ஆம் தேதி விருச்சிக ராசியில் நுழைந்தார். சந்திரன் விருச்சிக ராசியில் நுழையும் போது, இந்திர யோகம் என்ற சுப யோகம் உருவானது. இந்த யோகத்தால் ஒரு செல்வந்தராவதோடு, மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
இந்த இந்திர யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நற்பலனைப் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்திர யோகமானது மிகவும் சாதகமாக இருக்கும். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். பண பிரச்சனையால் நின்று போன வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இதுவரை வீட்டில் இருந்த பிரச்சனைகளும் நீங்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்திர யோகத்தால் நல்ல பண பலன்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்திர யோகமானது தொழிலில் சிறப்பான பலன்களை வழங்கும். காதலிப்பவர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதுவரை அவதிப்பட்டு வந்த நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்றுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்திர யோகத்தால் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இக்காலத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்திர யோகத்தால் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைப்பதோடு, பணத்தை சேமிக்கவும் முடியும். ஒன்றிற்கு மேற்பட்ட மூலங்களில் இருந்து வருமானத்தைப் பெறக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications