Latest Updates
-
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..
1 வருடத்திற்கு பின் உருவான தன ராஜயோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கும்..
Moon Mars Conjunction Made Dhan Rajyog: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிகளிலுமே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த விருச்சிக ராசியில் சூரியனும் பயணித்து வருகிறார். அத்துடன் டிசம்பர் 11 ஆம் தேதியான இன்று சந்திரனும் விருச்சிக ராசியில் நுழைகிறார். இதனால் விருச்சிக ராசியில் திரிகிரக யோகம் உருவாகிறது. அதோடு விருச்சிகத்தில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் தன ராஜயோகமும் உருவாகிறது.

இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். முக்கியமாக எதிர்பாராத வகையில் பண வரவைப் பெறக்கூடும். இந்த செவ்வாய் சந்திரன் சேர்க்கை இரண்டு நாட்கள் நீடித்திருப்பதால், இந்த இரண்டு நாட்கள் அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகமானது சிறப்பாக இருக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. உங்களின் திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகமானது வருமானத்தில் உயர்வை ஏற்படுத்தும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோரின் ஆசியுடன் புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகமானது மங்களகரமானதாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலர் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறலாம். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் மங்களகரமானதாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications