Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
குரு-சந்திர சேர்க்கையால் ஜூலை 10 முதல் இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Moon Jupiter Conjunction On 10 July 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் ஏற்படுவதுண்டு.
அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு. இந்த குரு தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இவர் ராசியை மாற்ற 1 வருடம் ஆகும். அதேப் போல் சந்திரன் மென்மையானவர் மற்றும் இவர் 2-3 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. குரு மற்றும் சந்திரன் நட்பு கிரகங்களாகும். எனவே இவ்விரு கிரகங்களின் சேர்க்கை நற்பலனை அளிக்கும்.
குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையானது 2023 ஜூலை 10 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது ஜூலை 12 ஆம் தேதி வரை நீடித்திரக்கும். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 1 ஆவது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். நல்ல பண வரவு இருக்கும் மற்றும் செல்வம் அதிகரிக்கும். வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். எதிர்பாராத பணத்தைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் புதிய தொழிலைத் தொடங்கினால், அது வெற்றிகரமாக நடக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலமானது அரசு வேலை செய்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த சேர்க்கையால் நல்ல பண வரவு இருக்கும். இக்காலத்தில் எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும், அது வெற்றிகரமாக முடிவதோடு, மிகப்பெரிய லாபத்தைத் தரும். வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிப்பதோடு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறக்கூடு. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் இக்காலத்தில் திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுவரை நிதி நெருக்கடியை சந்தித்து வந்தால், இக்காலத்தில் எதிர்பாராத வகையில் பண வரவைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications