Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
இந்த 6 இடங்களில் ஒன்றில் மச்சம் இருந்தா உங்களுக்கு எதிர்காலத்தில் ராஜயோகம் காத்திருக்காம்..உங்களுக்கு இருக்கா?
Lucky Moles on Body: அனைவருக்குமே உடலில் மச்சம் இருப்பது சகஜம்தான். ஆனால் சில மச்சங்கள் ஜோதிடரீதியாக அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உடலில் உள்ள சில மச்சங்கள் பெரும்பாலும் அழகின் ஒரு பகுதியாக இருந்தாலும் சில மச்சங்கள் நமக்கு அதிர்ஷ்டத்தையும் தருகின்றன. சாமுத்திரிகா சாஸ்திரத்தின் படி உடலின் சில இடங்களில் மச்சங்கள் அதிர்ஷ்டம் மட்டுமின்றி ராஜயோகத்தையும் கொடுக்கும்.
உங்கள் உடலில் இந்த பகுதிகளில் மச்சம் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, புகழ் மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். இத்தகைய மச்சங்கள் ராஜயோகத்தின் அடையாளமாகவும் குறிப்பிடப்படுகின்றன. இந்த பதிவில் எந்தெந்த இடங்களில் உள்ள மச்சங்கள் இருப்பது ராஜயோகம் என்று தெரிந்து கொள்ளலாம்.

வலது கன்னத்தில் மச்சம்
உங்கள் வலது கன்னத்தில் உள்ள மச்சம் இருப்பது மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த கன்னத்தில் மச்சம் இருந்தால் அது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது. மேலும் வெற்றி பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையில் தேடிவரும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கிறது. அவர்கள் 35 வயதுக்குள் வாழ்க்கையின் அனைத்து சாதனைகளையும் செய்கிறார்கள். அவர்கள் சொந்த தொழிலைத் தொடங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை அனுபவிப்பார்கள்.
உள்ளங்கையில் மச்சம்
உங்கள் உள்ளங்கையில் மச்சம் இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்வீர்கள் என்று அர்த்தம். உள்ளங்கையில் காணப்படும் மச்சம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு அதிகளவு செல்வம் தேடிவரும்.
அவர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளும் எளிதில் கிடைக்கும். எனவே எந்த நெருக்கடியிலும் சோர்வடையாமல் அவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியும். அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
மூக்கின் நுனியில் மச்சம்
உங்கள் மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால், அது உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. மூக்கில் மச்சம் இருப்பது ராஜயோகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இந்த மச்சம் உங்களுக்கு இருந்தால், பெரும் வசதியும் ஆடம்பரமும் உங்களுக்காகக் காத்திருக்கிறது. வாழ்க்கையில் நிதிரீதியாக மட்டுமின்றி, வேறெந்த வகையிலும் பிரச்சனைகள் இருக்காது. இவையனைத்தும் உங்கள் மூக்கின் நுனியில் இருக்கும்மச்சத்தின் விளைவால் நிகழும் என்று சாமுத்திரிகா சாஸ்திரம் கூறுகிறது.
மணிக்கட்டில் மச்சம்
உங்கள் மணிக்கட்டில் மச்சம் இருந்தால், நீங்கள் செல்வ செழிப்போடு வாழ விதிக்கப்பட்டவர்கள் என்பதைக் குறிக்கிறது. இது தவிர உங்களின் ஆளுமை மகிழ்ச்சி நிறைந்தது என்பதுதான் உண்மை. ஆண்களின் வலது மணிக்கட்டில் உள்ள மச்சம் எப்போதும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது, அது அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கிறது.
கட்டை விரலில் மச்சம்
கட்டைவிரலில் உள்ள மச்சம் உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை இருப்பதைக் குறிக்கிறது. கட்டை விரலில் உள்ள மச்சம் வாழ்க்கையின் எந்த நேரத்திலும் நல்ல அதிர்ஷ்டம் தேடிவரும் என்பதைக் குறிக்கிறது. கட்டை விரலின் நடுவில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். கல்வியைப் பொறுத்தவரை அவர்களுக்கு பல சாதகமான நன்மைகள் உள்ளன. வெளிநாட்டில் கல்வி கற்க இவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.
நெற்றியில் மச்சம்
உங்கள் நெற்றியில் மச்சம் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைய முடியும். 35 வயதிற்குள் தங்களின் அதிர்ஷ்டத்தாலும், திறமையாலும் பல சாதனைகள் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த மச்சம் வாழ்க்கையில் ஆடம்பரத்துடன் முன்னேறவும், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications
