இந்தியாவின் முதல் பெண் உலக அழகி யாருன்னு பாருங்க.. அவரின் சவால்களும்.. வெற்றிகளும்...

Miss World 2024: உலகழகி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராயும், சுஸ்மிதா சென்னும் தான். ஆனால் உண்மையில் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் ரீட்டா ஃபரியா ஆவார். இவர் 1966 இல் உலகழகி பட்டத்தை வென்றார். இவரைப் பற்றி நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்.

உலகழகிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசியப் பெண் இவர் தான். இவர் ஒரு மருத்துவரும் கூட. மும்பை மாநகரத்தில் பிறந்த இவர் மாடலிங் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மாடலிங் செய்து வந்தார். இவரைப் பற்றிய கூடுதல் விஷயங்களை இங்கே காண்போம்.

Miss World 2024 All You Need To Know About The First Woman Miss World Of India

இந்தியாவின் முதல் பெண் உலகழகி

ரீட்டா ஃபரியா பவல், ஆகஸ்ட் 23, 1943 இல் மும்பையில் பிறந்தார். அவர் அழகிப் போட்டி மற்றும் மருத்துவத் துறை இரண்டிலும் சாதனை படைத்தவர். 1966 ஆம் ஆண்டில், மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் மற்றும் முதல் மருத்துவர் என்ற வரலாற்று சாதனை படைத்தவர். தன்னுடைய திறமையால் மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

* பிறந்த தேதி : 23 ஆகஸ்ட் 1943
* பிறந்த இடம் : மும்பை, இந்தியா

ரீட்டா ஃபரியா ஒரு நடுத்தரக் கோன் கத்தோலிக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஜான் மற்றும் ஆன்டோனெட் ஆவார். சிறுவயதில் இருந்தே கடின உழைப்பை தன் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டவர். ரீட்டா ஃபரியா அவரது உயரமான தோரணையால் மற்றவர்களால் கிண்டலிக்கப்பட்டார். இருப்பினும் சவால்களை எதிர்கொள்ள அவர் தயங்கவில்லை. அவர் ஹாக்கியில் ஈடுபட துவங்கினார். ஹாக்கியில் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்.

மாடலிங் தொழில்

அவர் தன்னுடைய சின்ன வயதிலேயே அவருடைய அழகால் மிஸ் பாம்பே கிரீடத்தை எளிதாக வென்றார். ஆனால் அதோடு அவருடைய பயணத்தை முடிக்கவில்லை. மென்மேலும் முன்னேறி 1966 இல் ஈவ்ஸ் வீக்லி மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்பதற்கு வழி கிடைத்தது. இந்தியாவை சர்வதேச அரங்கில் கொண்டு போய் சேர்க்க அவர் ஆசைப்பட்டார். அதற்காக மாடலிங் துறையில் மிகத் தீவிரமாக பணியாற்றினார்.

சவால்கள்

ரீட்டா ஃபரியா ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரிய வசதி கிடையாது. அவர் உலகழகிப் போட்டிக்காக சென்ற போது அவரிடம் ஒரு சூட்கேஸ் மட்டும் தான் இருந்தது. அதில் 3 பவுண்டுகள் மட்டுமே இருந்தன. நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கிய சில ஆடைகள், மேக்கப் கிட்டுகள் மட்டுமே அவளிடம் இருந்தன. ஆனால் ஒரு போதும் அவர் நம்பிக்கையை விடவில்லை. நீச்சலுடை பிரிவிலும், சேலை பிரிவிலும் கலந்து கொண்டு கலக்கினார். அவருடன் போட்டி போட்ட 51 போட்டியாளர்களையும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

உலகழகி

மிஸ் வேர்ல்ட் 1966 போட்டியின் போது, ​​ரீட்டா ஃபரியா, 'பெஸ்ட் இன் நீச்சலுடை' மற்றும் 'பெஸ்ட் இன் ஈவினிங்வேர்' ஆகிய தலைப்புகளில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடினார். அவர் வெறும் அழகுக்காக மட்டுமல்ல அவருடைய கருணை, புத்திசாலித்தனம் மற்றும் கண்கவர் அழகு பார்வையாளர்களிடையே நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ரீட்டா ஃபரியா உலகழகியாக முடி சூட்டப்பட்டார். இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை நம் நாட்டிற்காக வாங்கி கொடுத்தார்.

மருத்துவர் பணி

ரீட்டா ஃபரியா உலகழகி பட்டத்தை வென்ற பிறகு அவர் படத்தில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் ரீட்டா ஃபரியா மருத்துவச் சேவை செய்ய வேண்டும் என நினைத்தார். எனவே அவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் ரீட்டா படிப்பைத் தொடர்ந்தார். தன்னுடைய எம். பி. பி. எஸ் படிப்பை முடித்து மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றினார். 1971 இல், அவர் தனது ஆசிரியரான டாக்டர் டேவிட் பவல் என்ற உட்சுரப்பியல் நிபுணரை மணந்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அவர்கள் இருவரும் அயர்லாந்தில் குடியேறினர். அங்கும் அவர் மருத்துவப் பயிற்சியை தொடங்கினார்.

அவருடைய பங்களிப்புகள்

1998 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ரீட்டா ஃபரியா நடுவராக இருந்தார். 1976 மிஸ் வேர்ல்ட் நடுவர் குழுவில் இருந்து சிண்டி பிரேக்ஸ்பியர் மிஸ் வேர்ல்டாக முடிசூட்டப்பட்டதைக் கண்டார். மிஸ் வேர்ல்ட் துறையிலும் சரி மருத்துவத் துறையிலும் சரி ரீட்டா ஃபரியா பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

Desktop Bottom Promotion