Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
162 நாடுகளை ஜெயித்ததை விட ஒரு வீரர் அதிக தங்க பதக்கத்தை ஒலிம்பிக் போட்டியில் ஜெயித்துள்ளாராம்... யார் இவர்?
Olympics 2024: ஒலிம்பிக் விளையாட்டுகள் என்பது உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு சர்வதேச நிகழ்வாகும். உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வெல்வதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் பயிற்சி செய்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் கோலாகலமாக நடந்து வருகிறது.
இந்தியா இதுவரை ஒலிம்பிக் வரலாற்றில் 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 8 பதக்கங்கள் அணியாகவும், அபினவ் பிந்த்ரா மற்றும் நீரஜ் சோப்ரா என இரண்டு பேர் தனித்தனியாக தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் பலர் நம்ப முடியாத மற்றும் நெருங்கவே முடியாத சாதனைகளை செய்துள்ளனர்.

அவர்களில் ஒருவர்தான் அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ். அவர் இதுவரை 23 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 28 பதக்கங்களை வென்றுள்ளார். இது ஒலிம்பிக் வரலாற்றிலேயே ஒரு தனிநபர் வென்ற அதிகபட்ச பதக்கங்களாகும். 162 நாடுகள் மொத்தமாக வென்றுள்ள பதக்கங்களை விட இது அதிகமாகும். இவருடைய சாதனையை முறியடிக்க இன்னும் பல தசாப்தங்கள் ஆகலாம்.
ஃபெல்ப்ஸின் வாழ்க்கை 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் தொடங்கியது, இந்த போட்டியில் அவர் 15 வயதில் போட்டியிட்டார். ஆனால் அந்த போட்டியில் அவர் எந்த பதக்கத்தையும் வெல்லவில்லை மற்றும் 200 மீ பட்டர்ஃபிளை பந்தயத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். ஆனால் இந்த வரலாறு படைத்த விளையாட்டு வீரர் 2004 இல் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இருந்து தனது பதக்க வேட்டையைத் தொடங்கினார்.
2012 ஒலிம்பிக்கிற்குப் பிறகு, ஃபெல்ப்ஸ் நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், விளையாட்டின் மீதான அவரது காதல் அவரை 2014 இல் மீண்டும் கொண்டு வந்தது. அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு 2016 ரியோ விளையாட்டுப் போட்டிகளில் மீண்டும் ஒருமுறை போட்டியிட்டார்.
பெல்ப்ஸின் வெற்றி நீச்சல் குளத்தில் மட்டும் இல்லை. அவரது சாதனைகள் அவருக்கு கணிசமான நிதி வெகுமதிகளைக் கொண்டு வந்துள்ளன, நிகர மதிப்பு சுமார் $100 மில்லியன் (ரூ. 837 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அவரை உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.
அமெரிக்க நீச்சல் வீரர் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ஆறு தங்கப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார், அதைத் தொடர்ந்து 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் நீச்சல் குளத்தில் தனது ஆதிக்கத்தைத் நிரூபிக்கும் வண்ணம் நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிகளை வென்றார். இறுதியாக, ரியோவில் நடந்த தனது கடைசி ஒலிம்பிக்கில், பெல்ப்ஸ் ஐந்து தங்கம் மற்றும் ஒரு வெள்ளியுடன் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகினார்.
மைக்கேல் ஃபெல்ப்ஸின் சாதனைகள் பலருக்கு உத்வேகம் அளிக்கிறது. அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் நம்பமுடியாத சாதனைகள் விளையாட்டு உலகில் உயர்ந்த இடத்தை அவருக்கு அளித்துள்ளது.



Click it and Unblock the Notifications











