Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
10 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி யோகம்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கப் போகுது...
Mercury Venus Make Mahalaxmi Rajyoga 2024: நவகிரகங்களில் செல்வத்தை அளிப்பவராக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் ஜனவரி 18 ஆம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைந்தார்.
ஏற்கனவே இந்த தனுசு ராசியில் நவகிரகங்களின் தளபதியான செவ்வாயும், நவகிரகங்களின் இளவரசனான புதனும் பயணித்து வருகிறார்கள். இதனால் தனுசு ராசியில் சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் ஒன்றாக பயணிக்கின்றன.

இதன் விளைவாக திரிகிரக யோகம், லட்சுமி நாராயண யோகம் மற்றும் மகாலட்சுமி யோகம் போன்ற மங்களகரமான யோகங்கள் உருவாகியுள்ளன. மூன்று சுப யோகங்கள் உருவாகியிருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும் மற்றும் நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ளதால், நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள், இந்த யோக காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வரன் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். நீண்ட காலமாக வேலையைத் தேடிக் கொண்டிருந்தால், இந்த யோக காலத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு வழிகளும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். சிலர் புதிய உறவுகளைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications