Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
கடக ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜூலையில் இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறப் போகுது...
Lakshmi Narayan Yoga: நவகிரகங்கள் தங்களின் ராசியை சீரான இடைவெளியில் மாற்றும் போது, சில சமயங்களின் கிரகங்களின் சேர்க்கையால் யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் ஜூலை மாதம் 07 ஆம் தேதி அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசியில் நுழைந்த சில நாட்களிலேயே, அதாவது ஜூலை 23 ஆம் தேதி வக்ர நிலையில் கடக ராசிக்கு செல்கிறார்.

அதே சமயம் புத்திகாரகனான புதன் ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இதனால் ஜூலை மாதத்தில் கடக ராசியின் புதன் சுக்கிரன் சேர்க்கையால் மங்களகரமான லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களின் தலைவிதி இந்த யோகத்தால் மாறப் போகிறது. அதாவது ஏராளமான நற்பலன்களையும், நிதி ஆதாயங்களையும் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் நிதி ரீதியாக இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். எதிர்பாராத வகையில் நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். பணத்தைப் பொறுத்தவரை அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பேச்சால் சமூகத்தில் உயர் நிலையில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஊடகம், மார்கெட்டிங் போன்ற பேச்சு தொடர்பான துறையில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். இதனால் இந்த யோகத்தால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்களையும் உருவாக்குவீர்கள்.
வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் விரும்பிய இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய நபர்களை சந்திப்பீர்கள் மற்றும் அவர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications