Latest Updates
-
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
மகரத்தில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பிப்ரவரியில் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகுது...
Lakshmi Narayan Yoga In Capricorn On February 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும். அப்படி ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும், அசுரர்களின் குருவான சுக்கிரனும் ஒன்றிணைந்து ஒரு ராசியில் பயணிக்கும் போது மிகவும் மங்களகரமான யோகமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகும். இப்படிப்பட்ட சுப யோகம் பிப்ரவரி 12 ஆம் தேதியில் உருவாகவுள்ளது.

அதுவும் சனி பகவானின் ராசியான மகர ராசியில் உருவாகவுள்ளது. இப்படி உருவாகும் யோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுவதோடு, நல்ல நிதி நன்மைகளையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலம். வணிகர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள்.
முதலீடுகளை செய்ய நினைப்பவர்கள், இந்த காலத்தில் செய்தால், நல்ல பலன்களைப் பெறலாம். சுக்கிரனின் அருளால் உறவுகள் வலுவாகும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இக்காலத்தில் புதிய தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பண வரவு சிறப்பாக இருக்கும்.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல வெற்றியுடன், பதவி உயர்வும் கிடைக்கலாம். சிலர் சம்பள உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் இக்காலத்தில் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இதனால் ராசிக்காரர்கள் தொழிலில் எதிர்பாராத வகையில் சில சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதாவது, தொழிலில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும். பணிபுரிபவர்களின் வேலை அலுவலகத்தில் நல்ல பாராட்டைப் பெறும். கடின உழைப்புக்கான முழு பலன் இக்காலத்தில் கிடைக்கும்.
வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். லட்சுமி தேவியின் அருளால் அபரிமிதமான நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். இதனால் உங்களுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications