Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
சிம்மத்தில் புதன்-சுக்கிர சேர்க்கை: அடுத்த ஒரு வாரம் இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும்...
Mercury Venus Conjunction In Leo 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்து பயணிக்கும். அப்படி கிரகங்களின் சேர்க்கை நிகழும் போது, சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும்.
அந்த வகையில் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சுக்கிரன் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஜூலை 25 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இதனால் சிம்ம ராசியில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவானது.

இந்த யோகமானது ஒரு சுப யோகம் மற்றும் இந்த யோகமானது ஆக்ஸ்ட் 07 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த சுப யோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல நிதி பலன்களைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் இந்த புதன் சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலைகளையும் தொடங்க வேண்டாம். இல்லாவிட்டால் அது தோல்வியையே அடையும். இக்காலத்தில் உங்களின் திட்டம் எதுவும் நடக்காது. பண இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும் நன்கு யோசித்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உங்களின் நிதி நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை குறையும். இதன் விளைவாக பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்காது. எனவே எந்த ஒரு முக்கியமான வேலையையும் இக்காலத்தில் செய்யாதீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் எழலாம். இக்காலகட்டத்தில் உங்களின் இலக்கை அடைய முடியாமல் போகும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் எந்த ஒரு வேலையும் நீங்கள் திட்டமிட்டபடி நடக்காது. இதனால் மன ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மேலும் நிதி நிலையிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் கவனமாக தங்களின் வேலையை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அது உங்கள் வேலைக்கு ஆப்பு வைத்துவிடும். எந்த ஒரு முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications