Latest Updates
-
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
புதன் பெயர்ச்சியால் உருவான 3 ராஜயோகங்கள்: அடுத்த 10 நாட்கள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கும்..
Mercury Transit 2023: கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கல்வி, புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் 12 மாதங்களுக்கு பின் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு ஜூன் 24 ஆம் தேதி நுழைந்தார்.
புதன் மிதுன ராசியில் நுழையும் போது, ஏற்கனவே அந்த ராசியில் சூரியன் பயணித்து வருவதால், புதாதித்ய ராஜயோகம் உருவானது. அத்துடன் புதன் பெயர்ச்சியால் வேறு இரண்டு சக்தி வாய்ந்த ராஜயோகங்களும் உருவாகின. அவை பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் மற்றும் பத்ர ராஜயோகம்.

புதன் பெயர்ச்சியால் உருவான 3 ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகங்களால் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது நிதியில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணை முழு ஆதரவை வழங்குவார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது ஊடகம், எழுத்து, கலை போன்ற துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஊடகம், எழுத்து துறையில் இருப்பவர்கள் தங்களின் திறமைக்கான அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது புதிய வேலை வாய்ப்புக்களைக் கொண்டு வரும். இதுவரை முதலீடு செய்து வந்தால், அதிலிருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமானவர்கள் குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது காதல் வாழ்க்கையை வலுப்படுத்தும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உள்ளன.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் உருவான யோகங்களால் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. விடாமுயற்சியுடன் செய்யும் வேலை உயர் அதிகாரிகளை ஈர்க்கும். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் இக்காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications