Latest Updates
-
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
ஒரு வருடம் கழித்து கன்னி செல்லும் புதன்: அக்டோபரில் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mercury Transit In Virgo On October 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வபோகது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது, அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். புதன் புத்திசாலித்தனம், வியாபாரம், படிப்பு, பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்த புதன் அக்டோபர் 01 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு ஒரு வருடத்திற்கு பின் செல்கிறார். சொந்த ராசிக்கு புதன் செல்வது சிறப்பான பலன்களைத் தரும்.
அதுவும் இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதன் அக்டோபர் 01 ஆம் தேதி 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இக்காலத்தில் சரியான இடத்தில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியுடன், முன்னேற்றமும் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் திருமணமானவர்கள் வாழ்க்கை அக்டோபர் 01 முதல் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் புதனின் அருளால் நல்ல லாபத்துடன், வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மேலும் இக்காலத்தில் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை முதலீரை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல பலனைப் பெறலாம். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications